யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இன்று இரவு செல்போன்கள் பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால் இன்றிரவு 12.30 தொடக்கம் 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் "NASA" செய்தி அறிவித்துள்ளது.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
செவ்வாய் கிரகத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் பூமியை நெருங்குவதால் இன்று இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என நாசா எச்சரித்ததாக இப்படியொரு ஃபார்வர்டு வதந்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

Facebook link
2017-ம் ஆண்டிலேயே நாசாவை வைத்து பரப்பிய இப்புரளி குறித்து நாம் வீடியோ, மீம் உள்ளிட்ட பதிவுகளை வெளியிட்டு தெளிவுப்படுத்தி இருந்தோம். அதே வதந்தியை கொஞ்சம் தூசி தட்டி, சிங்கப்பூர் செய்தி அறிவித்ததாக மாற்றி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த புரளியில் தேதி மற்றும் ஆண்டு குறிப்பிடாத காரணத்தினால் 10 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வருகிறது.
மேலும் படிக்க : அதிகம் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புழு படருமா ?| உண்மை என்ன ?
மேலும் படிக்க : இரவில் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புற்றுநோய் வருமா ?
இரவில் செல்போன்கள் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் இன்றளவும் பரப்பப்பட்டு வருகிறது. அது குறித்தும் படிக்கவும்.