யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களும், கிண்டல் மீம்ஸ்களுமே அதிகம் காணப்படுகின்றன. இப்படி இருக்கையில், கொரோனா வைரஸ் தொடர்பான நகைச்சுவை போஸ்டகளை பதவிட்டால் கூட போலீஸ் நடவடிக்கை எடுக்கும், அரசு தவிர்த்து மற்ற யாரும் கோவிட்-19 குறித்த...
பரவிய செய்தி
கொரோனா வைரஸ் தொடர்பாக ஜோக் போஸ்ட்களை தவறுதலாக பதிவிட்டால் கூட அட்மின்கள் மற்றும் குரூப் உறுப்பினர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆகையால், 2 நாட்களுக்கு குரூப்களை மூடவும். அரசு தவிர்த்து மற்ற யாரும் கோவிட்-19 குறித்த தகவல்களை வெளியிடக் கூடாது

விரிவான விளக்கம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களும், கிண்டல் மீம்ஸ்களுமே அதிகம் காணப்படுகின்றன.
இப்படி இருக்கையில், கொரோனா வைரஸ் தொடர்பான நகைச்சுவை போஸ்டகளை பதவிட்டால் கூட போலீஸ் நடவடிக்கை எடுக்கும், அரசு தவிர்த்து மற்ற யாரும் கோவிட்-19 குறித்த தகவல்களை வெளியிடக் கூடாது என வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நிச்சயம். ஆனால், நகைச்சுவை பதிவுகளுக்கு கூடவா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனுடன் Live law இணையதள லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது.

வைரலாகும் வாட்ஸ் அப் தகவலில் முதலில் இருக்கும், குரூப் அட்மின் மற்றும் உறுப்பினர்கள் கைது குறித்த தகவலை PIB (Press information bureau) உடைய ட்விட்டர் பக்கத்தில் போலியான செய்தி என வெளியிட்டு உள்ளனர். அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவுரையோ அல்லது ஆணையோ வெளியிடவில்லை என கூறப்பட்டுள்ளது.
அதே ஃபார்வர்டு செய்தியில் அளிக்கப்பட்டு இருக்கும் லிங்கில் சென்று பார்க்கையில், " எந்தவொரு ஊடகமும் அரசாங்கத்திடம் உண்மையை அறியாமல் கோவிட்-19 செய்திகளை வெளியிடக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் வழிநடத்துதல மத்திய அரசு நாடுகிறது " என்ற தலைப்பில் வைரஸ் தொடர்பான உண்மையான தகவல்கள் அரசிடம் இருந்து பெறாமல் அச்சிடவோ, வெளியிடவோ கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாக வெளியாகி இருக்கிறது.

அதே கட்டுரையில், live law உடைய செய்தி லிங்க் வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் தவறான தகவல் உடன் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டு வருவதாகவும் தங்கள் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை இணைத்து உள்ளனர்.
Twitter link | archive link
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து கிண்டல் போஸ்ட்களை பதிவிட்டாலோ அல்லது அரசு தவிர்த்து மற்ற குடிமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பதிவிட்டாலோ அல்லது ஃபார்வர்டு செய்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகும் என பரவும் தகவல் வதந்தியே.
எனினும், கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பரப்பி வருபவர்களையும், மதம் சார்ந்த வீடியோக்கள், தகவல்களை பரப்புபவர்கள் மீது போலீஸ் தரப்பில் வழக்கு பதியப்பட்டு வருகிறது என்பதையும் நினைவில் வையுங்கள்.
உலகளாவிய நோய்த்தொற்று வந்ததில் இருந்து வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்திகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காமல் செல்கிறது. இப்படி ஃபார்வர்டு செய்யப்படும் வதந்திகள், போலிச் செய்திகள், தவறான தகவல்களால் மக்கள் மத்தியில் ஒருவிதமான பயம் தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

A Fake message with the link of a @LiveLawIndia report is still going viral in WhatsApp Groups
Pls do not share it.
Read this report to know more about it
[Fake News Alert] https://t.co/NE3F4jZxO7 pic.twitter.com/dtsXebJN4f
— Live Law (@LiveLawIndia) April 6, 2020