YouTurn

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உதட்டில் இருந்து புழு அகற்றப்படுகிறதா ?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உதட்டில் இருந்து புழு அகற்றப்படுகிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர் அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சமயத்தில் கொரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உணவு கட்டுப்பாடு என பல பார்வர்டு செய்திகள் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. Facebook link | archived link வாட்ஸ் அப், முகநூல்...

பரவிய செய்தி

கொரோனா வைரஸின் மிக புதிய கொடிய வடிவம், சீனா பாதிக்கப்படுகிறது. உடனடியாக இந்தியாவுக்கு வரலாம். எந்தவிதமான குளிர் பானங்கள், ஐஸ்கிரீம்கள், குல்பி, பாதுகாக்கப்பட்ட உணவுகள், மில்க் ஷேக், கரடுமுரடான பனி, ஐஸ் கோலாஸ், பால் இனிப்புகள் போன்றவற்றை இன்று முதல் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு தவிர்க்கலாம்.

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர் அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சமயத்தில் கொரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உணவு கட்டுப்பாடு என பல பார்வர்டு செய்திகள் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Facebook link | archived link 

வாட்ஸ் அப், முகநூல் பார்வர்டு தகவல் ஒன்றில், "  கொரோனா வைரஸின் மிக புதிய கொடிய வடிவம், சீனா பாதிக்கப்படுகிறது. உடனடியாக இந்தியாவுக்கு வரலாம். எந்தவிதமான குளிர் பானங்கள், ஐஸ்கிரீம்கள், குல்பி, பாதுகாக்கப்பட்ட உணவுகள், மில்க் ஷேக், கரடுமுரடான பனி, ஐஸ் கோலாஸ், பால் இனிப்புகள் போன்றவற்றை இன்று முதல் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு தவிர்க்கலாம் " என வீடியோ ஒன்றுடன் பகிரப்பட்டு வருகிறது.

இந்த பதிவு ஆங்கிலத்தில் வெளியான வாக்கியத்தில் இருந்து அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்து வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பரப்பி வருகின்றனர். வைரலாகும் வீடியோ குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் வாட்ஸ் அப் மூலம் யூடர்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

உண்மை என்ன ? 

கொரோனா வைரசானது பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து காற்றின் வழியாக பரவக்கூடிய தன்மைக் கொண்டவை. ஆகையால்தான், மாஸ்க் அணிந்து கொள்வது, கைகளை சுத்தப்படுத்தி கொள்வது, இருமல் வந்தால் மறைத்துக் கொள்வது உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆனால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி வைரல் செய்யப்படும் வீடியோவில், நோயாளியின் உதட்டில் இருக்கும் துளையில் மருந்துகளை பயன்படுத்திக் கொண்டே இருக்கும் பொழுது இறுதியில் துளையில் இருந்த புழுவை வெளியே எடுக்கப்படுவதைப் பார்க்க முடிந்தது.



Youtube link | archived link

வீடியோவில் இடம்பெற்ற காட்சியை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் Venturi Life எனும் யூடியூப் சேனல் ஒன்றில், ஒருவரின் மேல் உதட்டில் இருந்து பயங்கரமான ஒட்டுண்ணி புழுவை நீக்குவதாக தலைப்பிட்டு வெளியிட்ட இதே வீடியோ வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் டிசம்பர் 2019-ல் இருந்தே பரவத் தொடங்கி உள்ளது.



Youtube link | archived link

இதேபோல், 2015 மார்ச் 24-ம் தேதி யூடியூப்-ல் வெளியான மற்றொரு வீடியோவில் ஒரு பெண்ணின் மேல் உதட்டில் இருந்து மருத்துவர் புழுவை நீக்குவது பதிவாகி இருக்கிறது. இந்த வகையான ஒட்டுண்ணி புழுக்கள் " Botfly" எனும் பூச்சியின் மூலம் பரப்பப்படுகிறது. கீழ்காணும் வீடியோவில், Botfly மனிதர்களின் உடலில் ஒட்டுண்ணி புழுவை எப்படி வெளியேற்றுகிறது, அந்த புழு பிற உயிரினங்களின் உடலுக்குள் செல்வது மற்றும் அவற்றை நீக்குவது உள்ளிட்டவை விளக்கப்பட்டு உள்ளது.



Youtube link | archived link

மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஐஸ்கிரீம் , குளிர்பானம் உள்ளிட்டவையை 90 நாட்களுக்கு தவிர்க்குமாறு கூறி வருகின்றனர். உண்மையில், அவற்றால் எவ்வித பயனுமில்லை. சுகாதார குறைபாடுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள உங்களைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது, கை மற்றும் கால்களை கழுவுவது மற்றும் இருமல், தும்மல் ஏற்பட்டால் துணியை வைத்து மறைத்துக் கொள்வது உள்ளிட்டவையை பிரதானமாக செய்ய வேண்டியது அவசியம்.

நம்முடைய தேடலில் இருந்து, கொரோனா வைரஸ் பாதிப்புடன் தொடர்புப்படுத்தி பரப்பப்பட்டு வரும் வீடியோ தவறானவை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஒட்டுண்ணி புழுவை நோயாளியின் மேல் உதட்டில் இருந்து அகற்றும் சிகிச்சை வீடியோவை கொரோனா வைரஸ் பாதிப்பு என தவறாக பரப்பி வருகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…