YouTurn

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே ரேஷன் பொருள் எனப் பரவும் வதந்தி !

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே ரேஷன் பொருள் எனப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அறிவிப்பு ! 13.09.2021 திங்கட்கிழமை முதல் ரேஷன் பொருட்கள் பெற நியாய விலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.



உண்மை என்ன ?

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எந்த ஊடகமும் அப்படியொரு செய்தியை வெளியிடவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையைத் தொடர்பு கொண்டு பேசுகையில், " அது வதந்தி, அப்படி எந்தவொரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை " என மறுத்து விளக்கம் அளித்து இருந்தனர்.

முடிவு : 

நம் தேடலில், செப்டம்பர் 13-ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் பெற நியாய விலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும் என பரவும் தகவல் வதந்தியே. தமிழ்நாடு அரசு அவ்வாறு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க