YouTurn

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கா ?

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு. 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி !



Archive link 

விரிவான விளக்கம்

44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தடுப்பூசி மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளித்து இருப்பதாக தெரிவித்தார் என புதிய தலைமுறை செய்தியில் வெளியாகியது.

ஆனால், கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளித்து இருந்தாலும், கொரோனா தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

" தடுப்பூசிகளுக்கு 5% ஜிஎஸ்டி தொடர்கிறது. முன்பு அறிவித்தப்படி, 75 சதவீத தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வாங்கும், மேலும் அதன் ஜிஎஸ்டியையும் செலுத்தும். இருப்பினும், ஜிஎஸ்டியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுடன் பகிரப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியதாக " இந்தியா டுடேவில் வெளியாகி இருக்கிறது.



2021 செப்டம்பர் வரைக்கும் அறிவிக்கப்பட்ட மாற்றத்தில், tocilizumab மற்றும் amphotericin b ஆகிய இரண்டிற்கு மட்டுமே ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக இடம்பெற்று இருக்கிறது.



நியூஸ்18, எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளிலும் தடுப்பூசிக்கான 5% ஜிஎஸ்டி தொடரும் என்றேக் கூறப்பட்டுள்ளது.

முடிவு:

நமது தேடலில், கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு என வெளியான செய்தி தவறானது. கொரோனா தடுப்பூசிகளுக்கு 5% ஜிஎஸ்டி தொடர்கிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க