YouTurn

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட பெண்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட பெண்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டு உள்ள கொரோனா வைரசை (COVID-19) தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தினை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாய் முயன்று வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, மனிதர்கள் மீது கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்துகளை...

பரவிய செய்தி

மனித குலத்தைக் காக்க கரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு முதல் பரிசோனைக்கு ஊசிப் போட்டுக் கொண்ட 43 வயதான ஜெனிஃபர் ஹேலரின் தியாக உள்ளத்திற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் !



Facebook link | archived link

விரிவான விளக்கம்

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டு உள்ள கொரோனா வைரசை (COVID-19) தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தினை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாய் முயன்று வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, மனிதர்கள் மீது கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்துகளை சோதிக்கும் பணிகள் துவங்கி இருக்கிறது.

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் செயல்பட்டு வரும் கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஹெல்த் ஆராய்ச்சி நிலையத்தில் முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு உள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரசின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்றும் கூறப்பட்டுள்ளது.

சியாட்டில் நகரில் மனிதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் முதல் பரிசோதனை ஊசியானது இரண்டு குழந்தைகளுக்கு தாயான 43 வயது பெண்மணிக்கு செலுத்தப்பட்டு உள்ளது. அவருக்கு பரிசோதனை ஊசி செலுத்தும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் உலக அளவில் வைரலாகி வருகிறது.

" கொரோனா வைரசை தடுக்க என்னால் முடிந்த ஓர் உதவியை செய்துள்ளேன் " என அப்பெண் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தும், இதுபோல் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரசிற்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளும் கொரோனா வைரசை குணப்படுத்துமா என்பதை அறிய சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

நோவல் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்பை சரி செய்யும் வகையில் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாய் உள்ளனர். தடுப்பூசிகளை சோதித்து பார்க்கும் நிலைக்கு தற்பொழுது ஆராய்ச்சிகள் முன்னேறி உள்ளன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…