யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா இல்லையா என கேள்வி கேட்டு தொலைப்பேசியில் அழைப்பு வருவதாக பரவும் வதந்தி.
பரவிய செய்தி
அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என்று கேட்டால், 1ஐ அழுத்தவும். இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும். ஆனால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு எண்களை அழுத்தினால், உங்கள் மொபைல் செயலிழந்து, உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் முழுவதும் மறைந்துவிடும், எனவே உடனடியாக அழைப்பை துண்டிக்கவும். முடிந்தவரை இந்த செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்புங்கள். எல்லா மொபைல்களிலும் விரைவாகப் பரவ வேண்டும். சைபர் கிரைம் போலீஸ்-
விரிவான விளக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது என்றும் அதில் சொல்லும் எண்ணை அழுத்தியதும் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது என்றும் சைபர் கிரைம் காவல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படுகிறது.
அவசர தகவல்
— anguchamy.a (@anguchamyA) May 7, 2024
தயவுசெய்து கவனிக்கவும்.
உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என்று கேட்டால், 1 ஐ அழுத்தவும்இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு எண்களை அழுத்தினால்,
உண்மை என்ன?
பரவக்கூடிய தகவல் குறித்து இணையத்தில் தேடியதில், இது 2021ஆம் ஆண்டு முதல் பரவிவரும் வதந்தி என்பதை அறிய முடிந்தது.
தெலங்கானாவில் இதே தகவல் 2021ஆம் ஆண்டில் பரவிய போது அதனுடன் ஒரு தொலைப்பேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் உதவி ஆணையர் KVM பிரசாத் அளித்த விளக்கம் ‘Telangana Today’ என்ற தளத்தில் செய்தியாக வெளியாகியுள்ளது. இது போலியான தகவல். இப்படி யாருக்கும் அழைப்பு வந்ததாக இதுவரையில் புகார் எதுவும் வரவில்லை. மேலும் நாங்கள் அந்த எண்ணையும் சோதனை செய்து விட்டோம். அது போலியான எண் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தகைய வதந்தி குறித்து ‘PIB fact check’ தங்களது எக்ஸ் பக்கத்திலும் விளக்கம் அளித்துப் பதிவிட்டுள்ளது. இவற்றில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என வரும் அழைப்பின் மூலம் செல்போன் ஹேக் செய்யப்படுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
Scam Alert
— PIB Fact Check (@PIBFactCheck) May 22, 202
People are receiving #COVID19Vaccine feedback calls from "912250041117". A WhatsApp forward says answering the call can hack phone#PIBFactCheck
▶️This is a #Fraud call
▶️"1921" is number used by Govt. of India for #COVID19Vaccine feedback
🔗https://t.co/fpjhTtTpIx pic.twitter.com/f67YhXqlXV
முடிவு:
இவற்றிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என அழைப்பு வருவதாகவும் அவ்வழைப்பு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படுவதாகவும் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. இது ஒரு வதந்தி.