யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பச்சிளம் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் தாயின் புகைப்படம் கோவிட்-19 நோய்த்தொற்று உடன் தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அப்புகைப்படத்துடன் இடம்பெற்று இருக்கும் வாக்கியம் மொழிப்பெயர்த்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. இதே புகைப்படத்தையும் இந்தியில் வெளியான...
பரவிய செய்தி
கொரோனாவின் மூன்றாவது பக்கத்தில் இத்தாலிய பெண் இறுதிக் கட்டத்தில் இருந்தாள், அதற்கு முன்னால் தனது 18 மாத குழந்தை மிகவும் அழுகிறாள். அவர் தனது குழந்தையை கட்டிப்பிடிக்க விரும்புகிறார். என்று அரசாங்கத்திடம் தனது கடைசி விருப்பத்தை வெளிப்படுத்தினார். அவர் முழு உடலையும் மெழுகுடன் அரசாங்கத்திடமிருந்து மெழுகால் மூடினார். மார்பில் படுத்துக் கொண்ட குழந்தை அமைதியாகினார்.

Facebook link | archive link

Facebook link | archive link
விரிவான விளக்கம்
பச்சிளம் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் தாயின் புகைப்படம் கோவிட்-19 நோய்த்தொற்று உடன் தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அப்புகைப்படத்துடன் இடம்பெற்று இருக்கும் வாக்கியம் மொழிப்பெயர்த்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.
இதே புகைப்படத்தையும் இந்தியில் வெளியான பதிவில், " மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். இத்தாலியின் பெண் கொரோனா நோயாளி மரணத்திற்கு முந்தைய மூன்றாம் கட்டத்தில் இருந்தார். அவருக்கு முன்னால் 18 மாத குழந்தை மிகவும் அழுதுக் கொண்டே இருந்தது. தனது குழந்தையை அணைத்துக் கொள்ள விரும்புவதாக தனது கடைசி ஆசையை மருத்துவரிடம் தெரிவித்தார். மருத்துவர்கள் அவரின் முழு உடலையும் மூடி மார்பில் குழந்தையை அணைத்துக் கொண்டார். குழந்தை உடனே அமைதியாகியது. பின்னர் தாய் இவ்உலகத்தை விட்டு நீங்கினார் " என வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
இத்தாலியைச் சேர்ந்த தாய் கோவிட்-19 நோய்த்தொற்றால் இறப்பதற்கு முன்பாக குழந்தையை அனைத்துக் கொண்டதாக பரப்பப்படும் புகைப்படம் சமீபத்தியவை அல்ல. அதற்கும் கொரோனா வைரஸ்(கோவிட்-19)-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், உலக அளவில் உள்ள புகைப்படங்களின் காப்பகமான மேக்னம் புகைப்படங்களின் ஸ்டோக்சில் புகைப்படம் இருக்கிறது. 1985-ம் ஆண்டில் ஸ்டெம் செல்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தை எடுத்து மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் பர்ட் க்ளின் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1985-ல் அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தாயின் உடல் முழுவதுமாக கவர் செய்யப்பட்டு குழந்தையை தாங்கி இருக்கும் புகைப்படமே தற்போது கோவிட்-19 உடன் தொடர்புப்படுத்தி தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
நம் தேடலில் இருந்து, இத்தாலியில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் இருப்பதற்கு முன்பாக குழந்தையை அனைத்துக் கொண்டதாக பரவும் புகைப்படம் தவறானது என அறிய முடிகிறது.