YouTurn

குப்பையில் கொட்டப்பட்ட முட்டைகள் கோழிக்குஞ்சுகளாக மாறினவா ?

குப்பையில் கொட்டப்பட்ட முட்டைகள் கோழிக்குஞ்சுகளாக மாறினவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் உடன் பரவிய வந்ததிகளால் கோழி, முட்டைகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. வதந்தியின் விளைவால் சில இடங்களில் கோழிகள் மற்றும் முட்டைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. அப்படி குப்பைகளில் வீசப்பட்ட கோழி முட்டைகள் வெயிலின் தாக்கத்தால் கோழிக்குஞ்சுகளாக பொரித்து உள்ளதாக...

பரவிய செய்தி


மனிதபிழைக்கு கொரோனா தந்த செருப்படி ! Corona முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொட்டப்பட்ட முட்டைகள், குப்பைமெட்டில், குஞ்சுகளாக ..... இயற்கையின் ஓர் அதிசயம்.




Facebook link | archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் உடன் பரவிய வந்ததிகளால் கோழி, முட்டைகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. வதந்தியின் விளைவால் சில இடங்களில் கோழிகள் மற்றும் முட்டைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

அப்படி குப்பைகளில் வீசப்பட்ட கோழி முட்டைகள் வெயிலின் தாக்கத்தால் கோழிக்குஞ்சுகளாக பொரித்து உள்ளதாக கீழ்காணும் வீடியோ முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைராலாகி உள்ளது.



Facebook link | archive link  

வைரலான வீடியோவை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். பின்னர் அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.



உண்மை என்ன ? 

வைரலாகி வரும் வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டது இந்தியாவில் இல்லை. இந்தியாவில் வைரலாவதற்கு முன்பே மார்ச் 27 முதல் 30-ம் தேதிக்குள் பாகிஸ்தான் நாட்டின் செய்திகளில் அவ்வீடியோ குறித்து வெளியாகி இருக்கிறது.



Youtube link | archive link 

மார்ச் 28-ம் தேதி GNN செய்தியின் யூடியூப் சேனலில் வீடியோ குறித்த செய்தி இடம்பெற்று இருக்கிறது. செய்திகளில், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட முட்டைகள் போதுமான வெப்பநிலை கிடைத்த காரணத்தினால் குஞ்சு பொரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது .

ஆனால், உண்மையில் வீடியோ காண்பிக்கப்பட்டு இருப்பது போன்று முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரிக்க வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு குஞ்சுகள் பொரித்தால் கூட அவை இறுதியில் உயிர் வாழ்வது ஆச்சரியம்.

ஒருவேளை வணிகத்திற்காக கோழிகளை வளர்க்கும் பண்ணை நிறுவனம் எடுத்துச் சென்ற குஞ்சுகள் அப்பகுதியில் சரிந்து கீழே சென்ற காரணத்தினால் அங்கேயே விட்டு சென்று இருக்கலாம் அல்லது விலை சரிந்த காரணத்தினால் கோழிக் குஞ்சுகளை கைவிட்டதால் இப்படி நிகழ்ந்து இருக்கலாம். எனினும், உறுதியான காரணங்கள் தெரியவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புப்படுத்தி வைரலாகும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…