YouTurn

கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் விடப்படும், தள்ளுபடி சாத்தியமில்லை என ஐ.பெரியசாமி கூறினாரா ?

கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் விடப்படும், தள்ளுபடி சாத்தியமில்லை என ஐ.பெரியசாமி கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் அறிவுத்தலின்படி ஏற்கெனவே சில மாவட்டங்களில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே தள்ளுபடி சாத்தியமில்லை - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டாதவர்களின் நகைகள் ஏலம் விடுவதாகவும், அதனால் தள்ளுபடி சாத்தியமில்லை என அமைச்சர் பெரியசாமி கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்றை பாஜகவினர், அதன் ஆதரவு பக்கங்கள் மற்றும் சில அதிமுகவினர் கூட பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.









உண்மை என்ன ?  

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கியில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டாலும், நகைக்கடன் பெற்றவர்களில் போலியான நபர்கள் இருப்பதால் முழுமையான ஆய்வு மேற்கொள்ள அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, யாரெல்லாம் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவர்கள் என ஓர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரப்பப்படும் செய்தி குறித்து தேடுகையில், கடந்த சில நாட்களில் அப்படி எந்த அறிவிப்பும், செய்தியும் வெளியாகவில்லை.


அதேபோல், ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் தேடிப்பார்க்கையில், ஜனவரி 26-ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி பற்றி பரவும் நியூஸ் கார்டு வெளியாகவில்லை. சொல்லப்போனால், அன்றைய தினத்தில் நியூஸ் கார்டுகளே வெளியாகவில்லை. குடியரசுத்தினம் என்பதால் அதுசார்ந்த புகைப்படங்களே வெளியாகி இருக்கிறது.



வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில், மேலே ஜூனியர் விகடன் லோகோ நீல நிறத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது வெளியாகும் நியூஸ் கார்டுகளில் மஞ்சள் நிறத்திலேயே லோகோ இடம்பெறுகிறது. அதேபோல், பரப்பப்படும் நியூஸ் கார்டில் நடுவில் வாட்டர் மார்க் இல்லை. ஆக, அது எடிட் செய்யப்பட்டது எனத் தெளிவாகிறது.



மேலும், எடிட் செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட அமைச்சர் பெரியசாமியின் புகைப்படம் கடந்த ஆண்டு விகடனில் வெளியான செய்தியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.


முடிவு :


நம் தேடலில், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் அறிவுத்தலின்படி ஏற்கெனவே சில மாவட்டங்களில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே தள்ளுபடி சாத்தியமில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க