யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தொழில்நுட்ப மென் பொருட்களோடு கண்டெய்னரில் அலுவலகம் மாதிரி செட்டப் பண்ணி தமிழகத்தில் உலாவும் லாரிகள் ! ஏன் எதுக்கு??
Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வாக்கு பதிவு இயந்திரங்கள் மீதான பேச்சே அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அதிகம் எழுந்து வருகிறது. இவிஎம் பேட்டிகளை இரவோடு இரவாக மாற்றி விடுவார்கள், ஹக் செய்து விடுவார்கள் என்ற அச்ச உணர்வு அவர்களிடையே அதிகம் இருக்கவே செய்கிறது.
இந்நிலையில், தொழில்நுட்ப மென்பொருட்களோடு கண்டெய்னரில் அலுவலகம் மாதிரி செட்டப் செய்து தமிழகத்தில் உலாவும் லாரிகள் எனக் கூறி சிறிய பகுதியில் மேசை, நாற்காலி உடன் அலுவலகம் போன்று இருக்கும் புகைப்படத்தை ஆயிரக்கணக்கில் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?
தமிழகத்தில் இவிஎம் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் திடீரென கண்டெய்னர் லாரிகள் வருவதாகவும், உரிய அனுமதி இல்லாத லேப்டாப் உள்ளிட்டவையுடன் நிபுணர்கள் வருவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய கண்டெய்னர் லாரிகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக தமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் பழுதானால் மாற்றுவதற்கும் பயன்படும் இயந்திரங்கள் மற்றும் பழுதான இயந்திரங்களே என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.
அடுத்ததாக, கோவையில் கண்டெய்னர் லாரி நின்றதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அது நடமாடும் கழிப்பறை என தகவல் வெளியாகியது. ஆனால், தமிழகத்தில் அலுவலகம் போன்ற அமைப்புடன் கண்டெய்னர் லாரி பிடிபட்டதாக எந்த தகவலுமே இல்லை.
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், indiamart தளத்தில் கண்டெய்னர்களில் ரூ.2 லட்சம் மதிப்பில் அலுவலகம் அமைத்து விற்பனை செய்வதாக இதேபோல் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

முடிவு :
நம் தேடலில், கண்டெய்னர்களில் அலுவலகம் போன்று அமைத்து விற்பனை செய்வதாக வெளியான புகைப்படத்தை எடுத்து தமிழகத்தில் மென் பொருட்களோடு கண்டெய்னர்கள் சுற்றுவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.