YouTurn

காங்கிரஸ் தொண்டர்கள் மியா கலீஃபா படத்துக்கு கேக் ஊட்டுவதாக ஃபோட்டோஷாப்!

காங்கிரஸ் தொண்டர்கள் மியா கலீஃபா படத்துக்கு கேக் ஊட்டுவதாக ஃபோட்டோஷாப்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சச்சின் உருவ படத்தில் தார் ஊற்றிய காங்கிரஸ் மியா படத்துக்கு கேக்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்த கருத்திற்கு எதிராக பதிவிட்ட சச்சின் படத்திற்கு கருப்பு சாயம் பூசிய காங்கிரஸ் தொண்டர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்த முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா புகைப்படத்திற்கு கேக் ஊட்டுவதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





தமிழில், காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இப்புகைப்படத்தை வைரல் செய்து வருவது போல், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் இப்புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.



Archive link 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை சாதாரண ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2007-ம் ஆண்டு ராகுல் காந்தியின் 37-வது பிறந்தநாளின் போது இளைஞர் காங்கிரஸினர் கேக் வெட்டி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என getty image தளத்தில் வெளியாகி இருக்கிறது.



13 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி பிறந்தநாளில் கேக் வெட்டி அவரின் புகைப்படத்திற்கு ஊட்டுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மியா கஃலீபா புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்து இந்திய அளவில் வைரல் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : பாப் பாடகி ரிஹானா பாகிஸ்தான் கொடி உடன் இருப்பதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

இதற்கு முன்பாக, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த அமெரிக்க பாப் பாடகி ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி நிற்பதாக ஃபோட்டோஷாப் செய்து இந்திய அளவில் வைரல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க