YouTurn

தஞ்சை பெரிய கோயில் மீது தோன்றிய வால் நட்சத்திரம், ஆட்சியாளருக்கு ஆபத்து எனப் பரவும் வதந்தி!

தஞ்சை பெரிய கோயில் மீது தோன்றிய வால் நட்சத்திரம், ஆட்சியாளருக்கு ஆபத்து எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!




OneIndia தமிழ் Link | Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் "பல சிறப்புகளை கொண்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு ராசி இல்லாத கோவில் என்பார்கள்.

அங்கே சென்றால் ஆட்சியாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நம்பிக்கை கூட உள்ளது. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது." என்று கூறி இரவில் கோவில் கோபுரத்தின் மேல்புறம், வால் நட்சத்திரம் தோன்றியிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



மேலும் இதனை OneIndia தமிழ் மற்றும் NewsTM தமிழ் போன்ற தமிழ் ஊடகங்களும் தங்களுடைய வலைதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

உண்மை என்ன?

OneIndia தமிழ்மற்றும் NewsTM தமிழ் போன்ற ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து ஒரு புகைப்படம் பதிவு செய்ப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இது முதன்முதலில் camerakirukkan என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த டிசம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.

அதில், "திருவாரூர் கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம். (Canon 1200D-ல் எடுக்கப்பட்டது) எந்தவொரு கையாளுதலும் இல்லாமல் ஒரே ஷாட்டில் கடினமான எடுக்கப்பட்ட ஷாட் இது. நியோவைஸின் கூடுதல் படங்களை கீழே காண்க" என்று குறிப்பிட்டு மேலும் சில இடங்களில் எடுத்த வால்நட்சத்திரமின் சில புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.



ஆனால் அதே பதிவில், ஒருவர் இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று கூறி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இந்தப் புகைப்படத்தை எடுத்த, camerakirukkan என்ற எக்ஸ் கணக்கிலிருந்து, "சரியாக 2020, ஜூலை 22 அன்று எடுக்கப்பட்டது" என்று பதிலளிக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



மேலும் இது திருவாரூரில் உள்ள கோவில் தானா என்பதை உறுதி செய்ய, திருவாரூர் மாவட்டத்தின் இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், இது திருவாரூர் தியாகராஜர் கோவிலின் புகைப்படம் தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.



ஆனால் உண்மையில் கடந்த 2020, ஜூலை 22 அன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரத்திற்கு மேல் வால்நட்சத்திரம் தோன்றியுள்ளதா என்பது குறித்து தேடியதில், அதே தேதியில் உலகின் பல இடங்களிலும் Neowise வால்நட்சத்திரம் ஏற்பட்டதற்கான புகைப்படங்களைக் காண முடிந்தது. ஆனால் பரவி வரும் பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு  திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரத்திற்கு மேல் வால்நட்சத்திரம் ஏற்பட்டுள்ளதாக என்பதற்கு, camerakirukkan என்ற எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புகைப்டத்தைத் தவிர, வேறு எந்த புகைப்படங்களும் கிடைக்கவில்லை.  

மேலும் வால் நட்சத்திரம் ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்ற தகவல்களும் தவறாகப் பரவி வருகினறனர். உண்மையில் வால்நட்சத்திரங்கள் அம்மோனியா, மீத்தேன், நீராவி போன்ற உறைந்த வாயுக்களால் ஆன வான் பொருட்கள் மட்டுமே. இவை நட்சத்திரங்கள் கிடையாது. மேலும் இவை நாள் ஒன்றிற்கே பல முறை ஏற்படக்கூடியவை. எனவே வால்நட்சத்திரங்கள் பூமியில் தென்படும் நிகழ்வை, ஆட்சியாளர்களுக்கு ஆகாது என்று கூறி பரப்புவது முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமற்ற தகவல்களே.

முடிவு:

நம் தேடலில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் தோன்றியதாகப் பரவி வரும் புகைப்படம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எடுக்கப்பட்டது என்பதையும், இந்த புகைப்படத்தை எடுத்தவர் இது கடந்த 2020-ல் எடுக்கப்பட்டது என்று கூறி பதிவிட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க