
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
Coimbatore to Trichur Tunnel Opened.
2hours Journey is now 10Minutes.
Thanks to the Govt of india Infrastructure development.
May be no Media house will talk about such Good News. pic.twitter.com/mTZy9H1Umo
— Ratnakar (@ratnakar273) August 9, 2021
இந்த பதிவிற்கு கீழே பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். மேலும், 2 மணி நேரம் பயணிக்கும் கோவை-திருச்சூர் 110 கி.மீ தொலைவை எப்படி 10 நிமிடத்தில் கடக்க முடியும் என பலரும் கமெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆகையால், இப்பதிவின் இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிட தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
பாஜகத் தலைவர் பதிவிட்ட சுரங்கப்பாதை குறித்து தேடுகையில், அது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் குதிரன் மலையில் உருவாக்கப்பட்ட குதிரன் சுரங்கப்பாதை என அறிய முடிந்தது. சமீபத்தில் தான் இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
We will open one side of the Kuthiran Tunnel in Kerala today. This is the first road tunnel in the state and will drastically improve connectivity to Tamil Nadu and Karnataka. The 1.6 km long tunnel is designed through Peechi- Vazahani wildlife sanctuary. pic.twitter.com/9yG0VhrsLq
— Nitin Gadkari (@nitin_gadkari) July 31, 2021
Twitter link | Archive link
ஜூலை 31-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பக்கத்தை இன்று திறக்கிறோம். இது மாநிலத்தின் முதல் சுரங்கப்பாதை சாலை. இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பை மேம்படுத்தும். 1.6 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பீச்சி-வாசஹானி வனவிலங்கு சரணாலயம் வழியாக வடிவமைக்கட்டுள்ளது " எனக் கூறி இருக்கிறார்.
" திருச்சூர் மாவட்டத்தில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரன் என்ற இடத்தில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதையை அமைக்கும் பணிகள் ஆனது கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. மன்னுத்தி - வடக்கன்சேரி பகுதிகளை இணைக்கும் இப்பகுதி மலைப் பாங்கான பகுதியாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டன.
சாலையின் இடையே குறுக்கிடும் மலையை கடக்க 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இவற்றை தவிர்க்கும் வகையில் மலையை குடைந்து தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுரங்கப்பாதை சாலை அமைக்க 2016-ல் திட்டமிடப்பட்டது. பாலக்காடு - திருச்சூர் சாலை மற்றும் திருச்சூர்-பாலக்காடு ஆகிய இரண்டு பாதைகளில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டிலும் சேர்த்து 6 வழிச் சாலையாக 1.6 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. இதனால் இரண்டு நிமிடத்தில் அந்த மலையை கடந்து செல்ல முடியும் " என ஆகஸ்ட் 4-ம் தேதி நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.
குதிரன் சுரங்கப்பாதை சாலையின் ஒருபக்கம் மட்டும் தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது சுரங்கப்பாதை பகுதியும் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை சாலை திறப்பு குறித்து தமிழ், மலையாளம், ஆங்கிலம் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

திருச்சூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதை சாலை திருச்சூர் மற்றும் பாலக்காடு சாலையில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இச்சாலை மலையை சுற்றி செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் குறைக்கவே உருவாக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், கோயம்புத்தூரில் இருந்து திருச்சூருக்கு போடப்பட்டதாக கூறப்படும் சுரங்கப்பாதை திருச்சூர்-பாலக்காடு இடையே சமீபத்தில் திறக்கப்பட்ட குதிரன் சுரங்கப்பாதை சாலை. இதன் தொலைவு 1.6கி.மீ. குதிரன் மலையை 3 கி.மீ சுற்றி செல்வதையும் மற்றும் போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்கவும், சில நிமிடங்களில் மலையை கடந்து பயணிக்கவும் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து திருச்சூருக்கு போடப்பட்ட சுரங்கப்பாதை, 2 மணி நேர பயணத்தை 10 நிமிடத்தில் என குஜராத் பாஜக தலைவர் பதிவிட்டதால் கோயம்புத்தூரில் இருந்து திருச்சூருக்கு எப்படி 10 நிமிடத்தில் செல்ல முடியும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அறிய முடிகிறது