YouTurn

அமைச்சர் மலேசியன் ஆரஞ்சு என தென்னையை நடுவதாக கிண்டலுக்குள்ளாகும் புகைப்படம்.. உண்மை என்ன ?

அமைச்சர் மலேசியன் ஆரஞ்சு என தென்னையை நடுவதாக கிண்டலுக்குள்ளாகும் புகைப்படம்.. உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பார்ப்பதற்கு தென்னை மரம் போல் காட்சியளிக்கும் இதுதான் மலேசியன் ஆரஞ்சு..



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மலேசியன் ஆரஞ்சு எனக் கூறி தென்னை மரக்கன்றை நடுவதாக திமுகவினர் மரம் நடும் இப்புகைப்படத்தை ட்விட்டர், முகநூல் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருவதை பார்க்க முடிந்தது. அந்த புகைப்படத்தில் தென்னை மரக்கன்று நடும் போது அருகே " மலேசியன் ஆரஞ்சு " என பெயர் பலகை இருப்பதால் கிண்டல் செய்து வருகின்றனர்.



உண்மை என்ன ?

புகைப்படத்தில் இருக்கும் மலேசியன் ஆரஞ்சு என்பது தென்னையின் வகையைக் குறிக்கின்றதே தவிர, ஆரஞ்சு பழத்தை அல்ல. ஆரஞ்சு நிறத்தில் இளநீர் காய்க்கும் குட்டை ரக தென்னை ஆனது "Malaysian orange dwarf coconut " என அழைக்கப்படுகிறது.



வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பவர் யார் எனத் தேடுகையில், தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் என அறிய முடிந்தது.



Facebook link | Twitter link | Archive link  

ஆகஸ்ட் 9-ம் தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் தன் முகநூல் பக்கத்தில், " இன்று புத்தளம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு தென்னை நாற்று பண்ணையில் பத்து வகையான நாட்டு ரக தென்னை மர கன்றுகள் நடப்பட்டது " எனப் பதிவிட்டு இருக்கிறார்.



இந்த பதிவில், " மலேசியன் பச்சை " எனும் பலகை கொண்ட புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. மலேசியன் ஆரஞ்சு எனும் பலகை கொண்ட புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.



" கன்னியாகுமரி மாவட்டம் செண்பகாரமன்புதூரில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் தென்னை மதிப்புகூட்டு மையம் விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்  " என ஆகஸ்ட் 11-ம் தேதி இந்து தமிழில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தென்னை கன்றை மலேசியன் ஆரஞ்சு எனக் கூறி நடுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு தவறாகும். அந்த புகைப்படத்தில் இருப்பது மலேசியன் ஆரஞ்சு என அழைக்கப்படும் தென்னை ரக மரக்கன்றே.

தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு தென்னை நாற்று பண்ணையை பார்வையிட்ட போது 10 வகையான நாட்டு ரக தென்னை மர கன்றுகள் நடப்பட்டு இருக்கிறது. அதில், மலேசியன் ஆரஞ்சு மற்றும் மலேசியன் பச்சை ரக தென்னை மரக்கன்றுகளை நட்டுள்ளார் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க