YouTurn

ரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் !

ரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மின் நிலையங்களுக்கு நிலக்கரியை வழங்குவதற்காக 4 கி.மீ நீளமுள்ள ரேக் ரயில் 4 எஞ்சின் உடன் போர்க்கால அடிப்படையில் இயக்கப்படுகிறது.  இதுவே மோடி அரசு, புதிய இந்தியா.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

நிலக்கரி தட்டுப்பாடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அனல் மின் நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு இல்லாமல் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாக உள்ளதாகவும், 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகளில் வெளியாகி வந்தன.

இந்நிலையில், அக்டோபர் 20 தேதி முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக எம்பியுமான பிரகாஷ் ஜவடேகர், " மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க 4 கி.மீ நீளமுள்ள ரேக் ரயில் மூலம் போர்க்கால அடிப்படையில் இயக்கப்படுவதாக " ட்விட்டரில் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் ரயிலின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.







எம்.பி பிரகாஷ் ஜவடேகர் பகிர்ந்த வீடியோவை வைத்து நியூஸ்18 ஆங்கில இணையதளத்தில் செய்தியும் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?  

பிரகாஷ் ஜவடேகர் பகிர்ந்த ரயில் பெட்டிகளில் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் வீடியோ ஆனது தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நேரத்தில் எடுக்கப்பட்டது அல்ல. 2021 ஜனவரி மாதம் இதே வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது .

ஜனவரி 6-ம் தேதி ஐஆர்டிஎஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், பிலாஸ்பூர் மற்றும்  கோர்பாவில் முதல் முறையாக 4 நிரப்பப்பட்ட சரக்கு ரயில் இணைக்கப்பட்டது. 500 ட்ரக்குகளுக்கு இணையான 16,000 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு கோர்பாவில் இருந்து பிலாய் வரை பயணித்தது " என 2 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link

இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை(ஐஆர்டிஎஸ்) என்பது ரயில்வே அமைக்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. ஐஆர்டிஎஸ் அசோசியேசன் நிலக்கரியுடன் ரயில் பயணிக்கும் இதே 2 நிமிட வீடியோவை ட்வீட் செய்து இருக்கிறது.



Twitter link  

மேலும், 2021 ஜனவரி 6-ம் தேதி 2.19 நிமிடங்கள் நீளமுள்ள வீடியோவை ரயில்வே அமைச்சகமும் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், மின் நிலையங்களுக்கு நிலக்கரியை வழங்குவதற்காக 4 கி.மீ நீளமுள்ள ரேக் ரயில் 4 எஞ்சின் உடன் போர்க்கால அடிப்படையில் இயக்கப்படுகிறது என பாஜக எம்பியும், முன்னாள் அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல, கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க