YouTurn

முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் மேட்டூர் ஆணை திறப்பா ?

முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் மேட்டூர் ஆணை திறப்பா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கூட்டமாய் அணையில் தண்ணீர் திறப்பை பூக்கள் தூவி வரவேற்கும் புகைப்படத்தை பகிர்ந்து மக்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள் என பதிவிட்டு வரும் பதிவுகளை காண நேர்ந்தது. முதலில் இப்புகைப்படத்தில் உள்ள யாருமே முகக்கவசம் அணியவில்லை...

பரவிய செய்தி

வீட்டில் இரு. விலகி இரு வெளியில் வந்தால் முக கவசம் கட்டாயம் - நல்ல அறிவுரை. மக்களுக்கு



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கூட்டமாய் அணையில் தண்ணீர் திறப்பை பூக்கள் தூவி வரவேற்கும் புகைப்படத்தை பகிர்ந்து மக்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள் என பதிவிட்டு வரும் பதிவுகளை காண நேர்ந்தது.

முதலில் இப்புகைப்படத்தில் உள்ள யாருமே முகக்கவசம் அணியவில்லை. கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருக்கும் காலத்தில் இப்படி கூட்டமாய் இருக்க வாய்ப்பில்லை. இப்புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி " என 2020 ஜூன் 12-ம் தேதி தினகரன் செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி உள்ளது.

தினகரன் செய்தியில் வெளியான இப்புகைப்படமே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது பழைய புகைப்படமே. புகைப்படத்தில் சேலம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இருப்பதை காணலாம். அவர் 2019-ம் ஆண்டிலேயே இசைக் கல்லுரி பதிவாளராக பணியிடம் மாற்றப்பட்டார். 2018-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் என இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



தினகரன் செய்தியில் வெளியான படத்தின் கீழே பழைய படம் எனக் குறிப்பிடாமல் விட்டதே இக்குழப்பத்திற்கு காரணம். அதில் இடம்பெற்ற புகைப்படத் தொகுப்பில் முதல்வர் முகக்கவசம், சமூக இடைவெளி உடன் மேட்டூர் அணையை திறந்து வைக்கும் மற்ற புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன.





2018-ல் மேட்டூர் அணையை நீர்பாசனத்திற்காக முதல்வர் கூட்டமாய் திறந்து வைக்கும் பொது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தினகரன் உள்ளிட்ட செய்திகளில் கோப்புக்காட்சி அல்லது பழைய புகைப்படம் எனக் குறிப்பிடாமல் வெளியிட்டதே குழப்பத்திற்கு காரணம். தவறான புகைப்படங்களை பகிர வேண்டாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க