YouTurn

பள்ளி மாணவர்கள் பொது இடத்தில் அத்துமீறல் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

பள்ளி மாணவர்கள் பொது இடத்தில் அத்துமீறல் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது. இப்படிப் பல வீடியோக்கள் அவர்களது யூடியூப் பக்கத்தில் உள்ளது.

பரவிய செய்தி

பள்ளிக்கூடம் படிக்கும் பிள்ளைகள்,  ஒரு ஆண் இரு பெண்கள் பொதுவெளியில் அத்துமீறல். நாடு எங்க போயிட்டு இருக்குன்னு தெரியல!

boy romancing with ntwo girls

X link

விரிவான விளக்கம்

பள்ளி படிக்கும் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் பொதுவெளியில் அத்துமீறி நடந்ததாகவும் இதனைப் பார்த்தவர் ஒருவர் அவர்கள்மீது தண்ணீர் ஊற்றி அங்கிருந்து துரத்தியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1848625384457400748


உண்மை என்ன?


பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், ‘Share Chat’ தளத்தில் இதே வீடியோ சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவிடப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. 


மேலும், பொதுவெளியில் பள்ளி மாணவர்கள் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்படுவதாக ‘Tv9 Bangla’ 2023, மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றிலிருந்து இது பல ஆண்டுகளாகப் பரவிவரும் வீடியோ என்பதை அறியமுடிகிறது. 


image.png


மேற்கொண்டு இதுகுறித்துத் தேடியதில், இதன் முழு வீடியோ Sonu Rai Shortsஎன்ற யூடியூப் பக்கத்தில் 2022, ஜூலை 29ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த முழு வீடியோவில் 30-வது வினாடி disclaimer காண்பிக்கப்படுகிறது. ’இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது.’ என்று அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதிலிருந்து பரவக்கூடிய வீடியோ சித்தரித்து எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. இதனை உண்மை சம்பவம் போல் Tv9 Bangla செய்தி வெளியிட்டுள்ளது. இப்படிப் பல வீடியோக்கள் அந்த யூடியூப் பக்கத்தில் உள்ளன. மேலும் இது எங்கு எடுக்கப்பட்டது, அந்த வீடியோவில் இருப்பவர்கள் யார் என்கிற விவரத்தை அறிய முடியவில்லை. தகவல் கிடைக்கும்பட்சத்தில் கூடுதல் தகவலாக இணைப்போம். 


சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பல உண்மை சம்பவமென இதற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது. அவை குறித்த உண்மைகளையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க: முஸ்லிம் ஆண்களே மோசமானவர்கள் என்ற வகையில் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட காணொளி.
மேலும் படிக்க: பண்டிட் கோழிக்கறி சாப்பிட்டதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!


முடிவு: 


பள்ளி படிக்கும் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாகப் பரவும் வீடியோ சித்தரித்து எடுக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.