
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
இந்நிலையில், ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கு தொடர்பாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, " ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு தடை செய்யவிட்டால் திரைத்துறையை விட்டே விலகுவேன். என்னை போல் பல இயக்குனர்களும், நடிகர்களும் திரைத்துறையை விட்டு விலகுவர் " எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக போகும் படங்களுக்கு அனுமதி இல்லை - புதிய சட்டம்
நீ ஏன் அலறுகிறாய்.
இறையாண்மைக்கு எதிராக போனாயா? போவாயா?
குற்றம் செய்யும் மனமே குறுகுறுக்கும்
யோக்கியனுக்கு ஏன் பயம்? @ikamalhaasan @Suriya_offl @Karthi_Offl pic.twitter.com/yPWuNhUxJp
— S.R.SEKHAR (@SRSekharBJP) July 3, 2021
Archive link
தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கு தொடர்பாக திரைத்துறையினர் தெரிவித்த கருத்துக்களின் செய்தி படங்களை பதிவிட்டு இருந்தார். அதில், சீனு ராமசாமி பற்றிய பரவும் இந்த நியூஸ் கார்டும் இடம்பெற்று இருந்தது.
உண்மை என்ன ?
சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 2-ம் தேதி, " தணிக்கை செய்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை அரசியல் காரணங்களை கூறி மறுதணிக்கை செய்கிறோம் என்று அத்திரைப்படத்தையே முடக்கும் அபாயம் இருக்கிறது ஆகவே #ஒளிப்பதிவுசட்டவரைவு மசோதாவில் 'மறுதணிக்கை' எனும் சரத்தை நீக்கவேண்டும் " என பதிவிட்டு இருக்கிறார்.
தணிக்கை செய்து
திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும்
திரைப்படத்தை
அரசியல் காரணங்களை கூறி மறுதணிக்கை செய்கிறோம் என்று அத்திரைப்படத்தையே முடக்கும் அபாயம்
இருக்கிறது ஆகவே#ஒளிப்பதிவுசட்டவரைவு மசோதாவில் 'மறுதணிக்கை' எனும் சரத்தை நீக்கவேண்டும்#cinematographact2021#FreedomOfExpression
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 2, 2021
Twitter link | Archive link
நியூஸ் 7 தமிழ் சேனலில் சீனு ராமசாமி பதிவு குறித்து தேடுகையில், ஜூன் 2-ம் தேதி இந்த ட்வீட் பதிவில் இருந்த கருத்தே வெளியாகி இருக்கிறது.
Facebook link
நியூஸ் 7 தமிழ் சேனலில் வெளியான நியூஸ் கார்டில் சீனு ராமசாமி பற்றி எடிட் செய்த செய்தியை வைரல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், " இது போல ஒரு டிவீட்டை நான் பதிவிடவே இல்லை. இந்த பொய்யான டிவீட்டை பதிவிட மெனக்கெட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் கலைஞன் அரசியல்வாதியில்லை. ஆகவே இது போல செய்வதால் பயனில்லை " எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இது போல ஒரு டிவீட்டை நான் பதிவிடவே இல்லை.இந்த பொய்யான டிவீட்டை பதிவிட மெனக்கெட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.நான் கலைஞன் அரசியல்வாதியில்லை ஆகவே இது போல செய்வதால் பயனில்லை.#FreedomOfExpression #cinematographact2021 https://t.co/fWixr53ORT
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 3, 2021
Archive link
மேலும் படிக்க : ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என சூர்யா கூறினாரா ?
இதற்கு முன்பாக, " சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல " என நடிகர் சூர்யா ட்வீட் வெளியிட்டு இருந்தார். அது தொடர்பான செய்தியை எடிட் செய்து சினிமாவில் இருந்து அவர் விலகுவேன் எனக் கூறியதாக வதந்தி பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு தடை செய்யவிட்டால் திரைத்துறையை விட்டே விலகுவேன் என திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.