YouTurn

நடிகர் பார்த்திபன் விஜய் பற்றி கூறியதாக பரவும் News Card! உண்மை என்ன?

நடிகர் பார்த்திபன் விஜய் பற்றி கூறியதாக பரவும் News Card! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகர் பார்த்திபன் தவெக தலைவர் விஜய் பற்றி கூறியதாக 'Just be Filmy' நிறுவனம் வெளியிட்ட News Card தவறானது என்று கூறி அந்நிறுவனமே அதனை நீக்கிவிட்டது.

பரவிய செய்தி

‘சமீபத்தில் தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வியந்து போய் விட்டேன். விஜய்யை பார்க்க வேண்டும் என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலையுடன் வந்து நின்றார்கள். தேர்தலுக்கு முன்பே விஜய்யை ஒரு முதலமைச்சராக மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்’ -  நடிகர் பார்த்திபன்


image.png


Archive Link 


image.png


Archive Link 


விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது ’அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பை பார்த்து, அவரை தேர்தலுக்கு முன்பே அவரை மக்கள் முதல்வாராக ஏற்றுக்கொண்டார்கள்’ என்று நடிகர் பார்த்திபன் கூறியதாக ‘Just be Filmy’ என்ற சினிமா செய்தித்தளம் News Card வெளியிட்டிருக்கிறது. அதனை தவெக ஆதரவாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.




உண்மை என்ன?


நடிகர் பார்த்திபன் தவெக தலைவர் விஜய் குறித்து இவ்வாறான கருத்து ஏதும் தெரிவித்திருக்கிறாரா என்று இணையத்தில் தேடினோம். அப்போது நடிகர் பார்த்திபன் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றைக் காணமுடிந்தது. 



அதில், இவ்வாறு அவர் சொன்னதாக ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்று  ‘Just be Filmy’ அலுவலத்தை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், அதற்கு அவர்கள் ஆதாரம் இல்லையென சொல்லி அந்த பதிவை நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 



மேலும், ’இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இது போல் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும்’ Just be Filmy நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அவரிடம் குறிப்பிட்டதாகவும் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். 


மேலும், ’நடிகர் பார்த்திபன் விஜய் பற்றி கூறியதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக வருந்துவதாக’ Just be Filmy தனது சமூக வலைத்தளத்தில் Story போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 


முடிவு:


நடிகர் பார்த்திபன் தவெக தலைவர் விஜய் பற்றி கூறியதாக பரவும் News Card தவறானதாகும். அதனை வெளியிட்ட  Just be Filmy நிறுவனமும் அதனை நீக்கிவிட்டது. இதனை அந்த நிறுவனமும் பார்த்திபனும் உறுதிபடுத்தியுள்ளனர்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க