YouTurn

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் தேவாலயம் இடிக்கப்பட்டதா? உண்மை என்ன?

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் தேவாலயம் இடிக்கப்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய் 

தொடர்ந்து இணைப்பில் இருங்கள்... 

கிருத்துவ சொந்தங்களே தேவையா உங்களுக்கு இது... 

கிறுத்துவ சகோதரர் ஆளா போகிறார் என்று நீங்கள் போட்ட இன்று உங்களுக்கு நீங்களே வைத்த வேட்டு... 

#TVKFailsTN

@TVKVijayHQ @TVKPartyHQ  உடனடியாக ராஜினாமா செய் 


image.png


X Link / Archive Link 


விரிவான விளக்கம்

கிறிஸ்த்துவ தேவாலயம் ஒன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படுகிறது. அதனை கண்டித்து மக்கள் போராடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘விஜய் தலைமையில் தவெக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே உத்தர பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்தியநாத் போன்று சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்படுகிறது’ என்று சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Asianet News’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 



2026 மே 07ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூப்பாரா என்ற கிராமத்தில் ஆற்றுப்படுக்கையில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதன் காரணமாக தேவாலயம் இடிக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இது குறித்து மேலும் தேடிய போது, ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி,  பூப்பாரா கிராமத்தில் 29 வீடுகள், 3 வழிபாட்டு நிறுவனங்கள், 56 கடைகள் உட்பட, பன்னியார் ஆற்றின் படுகையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட 88 கட்டிடங்களை இடுக்கி மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளதாக’ தெரியவருகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ கேரளா மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக தேவாலயம் இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது.


முடிவு:


கேரளாவின்  இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை, தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் தேவாலயம் இடிக்கப்படுவதாக தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க