யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஹிமாலயாவில் இருக்கக்கூடிய cho la pass, நம்ம கரிகாலரால் வந்தது என்று உங்களில் எத்தனை இந்தியர்களுக்கு தெரியும். கரிகாலரால் உருவாக்கப்பட்ட chola pass ம், chola மலைத்தொடரும் இன்றும் ஹிமாலயாவில் ட்ரெக்கிங் போகிறவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வழியாக இருக்கு. ஆனால் இது பற்றி வட இந்தியாவில் பள்ளிப் பாட புத்தகங்களில் கூட குறிப்பிடப்படவில்லை. ஏன்? கரிகாலர் தமிழர் என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் புறக்கணிக்கப்படனுமா ? 
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இமயமலையில் இருக்கக்கூடிய "Cho la" கணவாய் கரிகால சோழரால் தான் உருவாக்கப்பட்டது, அதனால் தான் அதற்கு "சோ லா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறி 58 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் "ஹிமாலயாவில் இருக்கக்கூடிய "Cho La Pass", நம்ம கரிகாலரால் வந்தது என்று எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்? வெண்ணிப் போரில் சேரர்களையும், பாண்டியர்களையும் தோற்கடித்து வெற்றி பெற்ற பின்னர், இமயம் நோக்கி பெரும் படையுடன் புறப்பட்டார் கரிகாலன். சோழ தேசத்திலிருந்து முன்னேறி இடையில் வந்த கலிங்கம் மற்றும் வஜ்ர தேசத்தையும் தோற்கடித்து முன்னேறினார்.
அப்போது இமயத்தை அடையக்கூடிய புதிய வழியை கண்டுபிடித்தார். அது தான் இன்று சிக்கிமையும், திபெத்தையும் இணைக்கக்கூடிய "Cho La Pass". அங்கே சென்று அவர் சேரர், சோழர், பாண்டியர் முத்திரைகளை பதித்த வரலாறு சிலப்பதிகாரம் மற்றும் பெரிய புராணத்தில் உள்ளது. கரிகாலரால் உருவாக்கப்பட்ட "Cho La Pass" ம், Chola மலைத்தொடரும் இன்றும் ஹிமாலயாவில் ட்ரெக்கிங் போகிறவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வழியாக இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் பள்ளி பாட புத்தகங்களில் கூட இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏன்? கரிகாலர் தமிழர் என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் இவ்வாறு புறக்கணிக்கப்பட வேண்டுமா ?" என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும் காண முடிகிறது.
மேலும் இந்த வீடியோ முதன்முதலில் "Jenni's vodcast" என்ற யூடியூப் பக்கத்தில் தான் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.
இக்கதை கடந்த 2019ம் ஆண்டே 'E-pao' என்ற வலைத்தளப் பக்கத்திலும் ஒரு கட்டுரையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து வரைபடத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், "Cho La Pass" என்பது நேபாள நாட்டில் அமைந்துள்ள ஒரு ட்ரெக்கிங் மலைப்பாதையாகும்.

நேபாளத்தில் உள்ள ஒரு மலைப்பாதைக்கு "Cho La Pass" என்று பெயர் வைப்பதற்கான காரணம் குறித்து தேடியதில், நேபாளத்தில் உள்ள பெரும்பாலான மலைப்பாதைகள் அனைத்தும் "La" என்று தான் அழைக்கபடும் என்பதை அறிய முடிந்தது.

அங்குள்ள பத்து முக்கிய மலைப்பாதைகளான தோரோங் லா பாஸ், காங் லா பாஸ், மெசோகாண்டோ லா பாஸ், சோ லா பாஸ், ரென்ஜோ லா பாஸ், கொங்மா லா பாஸ், லார்க்யா லா பாஸ், செலே லா பாஸ், லாரிபைநாயக் லா பாஸ் என அனைத்து மலைப்பாதைகளுமே "La Pass" என்று தான் அழைக்கப்பட்டிருந்தன. இதன் படியே 'சோ' பகுதியையும், "La Pass" என்பதை சேர்த்து, "Cho La Pass" என்று அழைக்கப்படுகிறது என்பதை trekking-in என்ற நேபாள இணையதளத்தின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது.

சோ லா கணவாய் எவரெஸ்ட் பேஸ்கேம்ப்-க்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது கும்பு பகுதியின் இரண்டு பிரபலமான இடங்களான கோக்கியோ ஏரி மற்றும் எவரெட் பேஸ்கேம்ப் இடையே அமைந்திருப்பதால் மலையேற்றம் செய்பவர்கள் அடிக்கடி இதைக் கடந்து செல்கின்றனர். மேலும் அங்கு Cho oyu எனும் மலைத்தொடரும் உள்ளது.

ஆனால் "Cho La Pass" என்பதை "சோழா Pass" என கூறி, இது சோழர்களுடன் தொடர்புடைய மலைப்பாதை என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.
மேலும் படிக்க: சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !
மேலும் படிக்க: ஏர்இந்தியா விமானத்தில் பேரரசர் ராஜேந்திரச் சோழன் பெயர் !
முடிவு:
நம் தேடலில், கரிகாலச் சோழரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இமயமலையில் உள்ள 'சோ லா கணவாய்' எனப் பரப்பப்படும் தகவல் தவறானவை என்பதையும், நேபாளத்தில் உள்ள Cho La Pass என்பதில் La பொதுவாக மலைப்பாதையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.

Chola Pass in Sikkim was cut by Karikaala Chozhan. Why not include this in history books of north India? @narendramodi ji https://t.co/800fLPH9BL
— K N V ~ Venkat (@123KNV) February 24, 2024