YouTurn

ட்ராகனைப் பார்த்துமா இந்தியா எனப் பரப்புறீங்க.. இந்தியாவில் நிகழ்ந்ததாகப் பரவும் சீன லைட் ஷோ!

ட்ராகனைப் பார்த்துமா இந்தியா எனப் பரப்புறீங்க.. இந்தியாவில் நிகழ்ந்ததாகப் பரவும் சீன லைட் ஷோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவில் மிகவும் அழகான லைட் ஷோ ஜோத்புரில் இதை பார்ப்பதற்கு கட்டணம் 1 நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் நாம் இலவசமாக பார்க்கலாம் அற்புதம்..



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தண்ணீரில் அமைக்கப்பட்டு இருந்த லைட் ஷோ நிகழ்ச்சியில் ட்ராகன் கோட்டையை சுற்றுவது போன்றும், நெருப்பை உமிழ்வதைப் போன்றும் ஆரம்பிக்கிறது இவ்வீடியோ. பின்பு தண்ணீரில் லைட் மூலம் நடனம் என பல அற்புதமான காட்சிகள் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இந்த லைட் ஷோ இந்தியாவின் ஜோத்பூரில் நிகழ்ந்ததாகவும், இதைப் பார்ப்பதற்கு ஒரு நபருக்கு 3,000 கட்டணம் என்றுக் கூறி கடந்த ஆண்டில் இருந்து இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.





உண்மை என்ன ? 

ட்ராகன் சீனக் கலாச்சாரத்தில் இடம்பெறும் முக்கியமான ஒன்றாகும். வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருக்கும் காட்சிகள், பின்னணி மொழி என அனைத்தும் சீன நாட்டைச் சேர்ந்தது என எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அப்படி இருந்துமே, இந்த லைட் ஷோ நிகழ்ச்சி இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாக பரவி வருகிறது.



சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அன்ஹூய் மாகாணத்தைச் சேர்ந்த புயாங்கில் அமைந்திருக்கும் ஷூவாங்கிங்வான் பூங்காவில் பண்டைய போர் தீம் வாட்டர் ஷோ நிகழ்வது வழக்கம். இந்த வீடியோ 70வது தேசிய தின கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்ததாக தவறான தகவல் பரவுகிறது என்று piyao.org.cn  இணையதளத்தில் சீன மொழியில் வீடியோ குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் உள்ள உமைத் பவன் பேலஸ் லைட்ஷோவிற்கு புகழ்பெற்ற ஒன்றாகும். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்காக உமைத் பவன் பேலஸில் லைட் ஷோ நிகழ்ச்சி நிகழ்ந்து இருக்கிறது.



இந்தியாவில் ஜோத்பூர் பகுதியில் நட்சத்திர விடுதியாக செயல்படும் உமைத் பவன் பேலஸில் லைட் ஷோ நிகழ்வது வழக்கம். ஆனால், அதற்கு பதிலாக சீனாவில் நிகழ்ந்த லைட் ஷோ நிகழ்ச்சியை ஜோத்பூரில் நிகழ்ந்ததாக தவறாகப் பரப்பி வருகிறர்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க