யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
சீனாவில் சனாதன பாசிச #மோடி அரசின் ஆட்சியில் சர்வாதிகார போக்கினால் சீன வங்கிகள் திவால். 1000 யுவான்க்கு மேல் பணம் எடுக்க தடை !!

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
எம்.பி தொல்.திருமாவளவன் சீன வங்கிகள் திவால் ஆகியதற்கு இந்திய பிரதமர் மோடியை ஆட்சியை கண்டித்தது போன்ற ட்வீட் பதிவை வெளியிட்டது போன்றும், அதற்கு ஒருவர் கடுமையாக கமெண்ட் செய்தது போன்றும் ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
எம்.பி தொல். திருமாவளவன் பெயரில் போலியான ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி இப்படியொரு ட்வீட் பதிவை வெளியிட்டு இருக்கிறார்கள். அதிலும், பனம் மற்றும் சர்வதிகாரி போன்ற எழுத்துப் பிழைகள் உடன் ட்விட்டை வெளியிட்டு உள்ளனர்.

Twitter link | Archive link
இந்த ட்விட் குறித்து தேடுகையில் கிடைக்கவில்லை. அதற்கு கமெண்ட் செய்தவர் குறித்து தேடுகையில், @thirumaoffical தொல்.திருமாவளவன் பெயரில் இருந்த போலி ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டதை அறிய முடிந்தது.

எம்.பி தொல்.திருமாவளவன் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகாத மற்றும் போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவிற்கு ஒருவர் கமெண்ட் செய்த ஸ்க்ரீன்ஷார்டை வைத்து தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் ட்விட்டர் பக்கம் ப்ளூ டிக் வாங்கி உள்ளதை பார்க்கலாம்.

Twitter link
மேலும் படிக்க : திருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு !
இதற்கு முன்பாக, திருமாவளவன் பேசியதாக போலி நியூஸ் கார்டுகளும், அவரின் முகத்தை எடிட் செய்த புகைப்படத்தை வைத்து போலி செய்திகளை பரப்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : திருமாவளவன் முகத்தை ஃபோட்டோஷாப் செய்து வதந்தி!
முடிவு :
நம் தேடலில், எம்.பி திருமாவளவன் சீன வங்கிகள் திவால் ஆகியதற்கு இந்திய பிரதமர் மோடியை கண்டித்ததாக பரப்பப்படும் ட்வீட் போலியான பக்கத்தில் வெளியானது, அந்த போலி ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.