YouTurn

ஓசூரில் ராட்சத ஆலங்கட்டி மழை பெய்ததாகப் பரவும் சீன வீடியோ!

ஓசூரில் ராட்சத ஆலங்கட்டி மழை பெய்ததாகப் பரவும் சீன வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை. தலையில் விழுந்தால் அவ்வளவு தான். ஓசூர் அருகில் செட்டிப்பள்ளி கிராமம் என்று வந்தது. என்னடா இது எப்படி வேண்டுமானாலும் உலகம் அழியும் போல. இது போல் பெரிய பெரிய பனிக்கட்டிகள் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும் பட்சத்தில் எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் மற்றும் விவசாய விலை நிலங்கள் மரம் செடி கொடிகள் எதுவும் மிஞ்சாது போல. இதற்கு காரணம் காலநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல், சுற்று சூழல் பாதிப்பு இவைகள் தான் காரணம். பூமியை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டும்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஓசூர் அருகே உள்ள செட்டிப்பள்ளி கிராமத்தில் பயங்கரமான ஆலங்கட்டி மழை பெய்ததாகக் கூறி 33 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில், மிகப்பெரிய பனிக்கட்டிகளாக, ஆலங்கட்டி மழை பெய்வதையும் காண முடிகிறது.

மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், "ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை. தலையில் விழுந்தால் அவ்வளவு தான். இது போல் பெரிய பனிக்கட்டிகள் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும் பட்சத்தில் எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் மற்றும் விவசாய விலை நிலங்கள் மரம் செடி கொடிகள் எதுவும் மிஞ்சாது போல. இதற்கு காரணம் காலநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல், சுற்று சூழல் பாதிப்பு இவைகள் தான் காரணம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.





Agencia Venezuela News என்ற வெனிசுவேலா ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் அதே வீடியோ "12 செமீ விட்டம் கொண்ட ராட்சத ஆலங்கட்டி மழை போன்ற மோசமான வானிலையால் தெற்கு சீனா தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இது பல விலங்குகளின் மரணத்திற்கும் காரணமானது" என்றும் குறிப்பிடப்பட்டு ஏப்ரல் 28 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.









இதே போன்று "Lovinmalta" என்ற ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், இதே வீடியோ தெற்கு சீனாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு ஏப்ரல் 30 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.


அதில், "வார இறுதியில் தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மற்றும் குவாங்சியில் கடும் ஆலங்கட்டி மழை பேரழிவை ஏற்படுத்தியது. ராட்சத ஆலங்கட்டிகள் 20 செமீ வரை அளவிடப்பட்டன மற்றும் மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணித்தன. ஆலங்கட்டி மழையின் அளவு குடியிருப்பாளர்களை ஆச்சரியப்படுத்தியது, அவற்றில் சில ஒரு மிகப் பெரியதாக இருந்தன. புயல், கூரைகள், ஜன்னல்கள் மற்றும் விவசாய பகுதிகளில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையின் தாக்கம் காரணமாக சில விலங்குகளும் இதுக்கு பலியாகின" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.




 










View this post on Instagram























 

A post shared by Lovin Malta (@lovinmalta)






மேலும் படிக்க: பண்ருட்டி – விழுப்புரம் சாலை மோசமாக இருப்பதாக ஹெச்.ராஜா பதிவிட்ட சீன வீடியோ!


முடிவு:


நம் தேடலில், ஓசூர் அருகே உள்ள செட்டிப்பள்ளி கிராமத்தில் ராட்சச ஆலங்கட்டி மழை பெய்த்தாகப் பரவும் வீடியோ, தெற்கு சீனாவில் எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க