யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
" போயும் போயும் இதையெல்லாம் கூடவா Fact check செய்து போடுவீங்க " என சிலர் நம்மிடம் கேட்கும் பதிவுகளில் ஒன்றாக இந்த பதிவும் கண்டிப்பாக இருக்கும். சீன நாட்டின் அதிபர் ஷி ஜின் பிங் தன் மனைவியுடன் விமானத்தில் இருந்து இறங்கி வரும் பொழுது தன் மனைவி உடைய கைப்பையை அவரே கொண்டு வருகிறார் என கிண்டல் செய்து...
பரவிய செய்தி
நீ சீனாவுக்கே தலைவனா இருந்தாலும் பொண்டாட்டிக்கு கைப்பையை தூக்கித்தான் ஆகணும் கண்ணு !

Facebook link | archived link

Facebook link | archived link
விரிவான விளக்கம்
" போயும் போயும் இதையெல்லாம் கூடவா Fact check செய்து போடுவீங்க " என சிலர் நம்மிடம் கேட்கும் பதிவுகளில் ஒன்றாக இந்த பதிவும் கண்டிப்பாக இருக்கும். சீன நாட்டின் அதிபர் ஷி ஜின் பிங் தன் மனைவியுடன் விமானத்தில் இருந்து இறங்கி வரும் பொழுது தன் மனைவி உடைய கைப்பையை அவரே கொண்டு வருகிறார் என கிண்டல் செய்து பகிரப்பட்டு வரும் புகைப்படம் உண்மையா என பலரும் கேட்டு வருகின்றார்கள்.

Facebook link | archived link
இந்த பதிவு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே முகநூலில் பதிவாகி இருக்கிறது. சமீபத்தில் யூடர்னில் ஆண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற தலைப்பில் பேசப்பட்ட காணொளியைக் குறிப்பிட்டு, பெண்கள் ஆதிக்கமே உலகில் தழைத்து இருப்பதாகவும், அதற்கு சான்றாக சீன அதிபர் தன் மனைவியின் கைப்பையை தூக்கி வரும் புகைப்படத்தை யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் பகிர்ந்து இருந்தார்.

இந்த கமெண்ட் பதிவை நகைச்சுவையாக கருதி கடந்து சென்றாலும், இங்கு பதிவிடப்பட்டுள்ள புகைப்படம் தவறானவை எனக் கூற வேண்டி இருக்கிறது. உண்மையில், சீன அதிபர் தன் மனைவியின் கைப்பையை தூக்கி வரவில்லை, அவர் மனைவி தான் அந்த பையைத் தூக்கி வந்துள்ளார். இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம்.

2014-ல் சீன அதிபர் தன் மனைவியுடன் மாஸ்கோ மற்றும் டார் எஸ் சலாம் பகுதிகளுக்கு சென்ற பொழுது விமானத்தில் இருந்து இறங்கும் காட்சிகள் வைரலாகியதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை பிற நாடுகளில், ஏன் சீனாவிலும் போட்டோஷாப் செய்து தவறாக பரப்பி இருந்தனர். அந்த போட்டோஷாப் புகைப்படமே தமிழிலும் பரவி வருகிறது.