YouTurn

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க சீன பிரதமர் தொழுகை செய்தாரா ?

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க சீன பிரதமர் தொழுகை செய்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீனாவில் பரவிய கொரோனா வைரசால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் தருணத்தில், சீனாவின் பிரதமர் அங்குள்ள மசூதிக்கு சென்று தொழுகை செய்துள்ளதாக ஓர் வீடியோ பதிவு முகநூல் உள்ளிட்டவையில் பரவி வருகிறது. Facebook link | archived link உண்மையில், அந்த வீடியோவில் இருப்பது சீன நாட்டின் அதிபரே அல்ல...

பரவிய செய்தி

தனது நாட்டுமக்கள் கொரோனா வைரசால் மடிகிறார்கள். அதற்கு பரிகாரம் அல்லாஹ்விடம்தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் அவர்கள்.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

சீனாவில் பரவிய கொரோனா வைரசால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் தருணத்தில், சீனாவின் பிரதமர் அங்குள்ள மசூதிக்கு சென்று தொழுகை செய்துள்ளதாக ஓர் வீடியோ பதிவு முகநூல் உள்ளிட்டவையில் பரவி வருகிறது.



Facebook link | archived link 

உண்மையில், அந்த வீடியோவில் இருப்பது சீன நாட்டின் அதிபரே அல்ல. வைரலாகும் வீடியோவில் குறிப்பிட்டு இருக்கும் AP என்ற லோகோவை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், 2015-ம் ஆண்டில் AP Archive எனும் செய்தி சேனலில் தலைநகரில் உள்ள மசூதிக்கு பிரதமர் வருகை என தலைப்பிட்டு வெளியான வீடியோ கிடைத்தது. அதில், மலேசியா நாட்டின் பிரதமர் அப்துல்லா அஹமத் படாவி மசூதிக்கு வருகை தந்தது குறித்து செய்தியாக வெளியாகி இருக்கிறது.



Youtube link | archived link 

ஐந்து நாள் பயணமாக சீனா வந்த மலேசிய பிரதமர் அப்துல்லா அஹமத் பாடவி பயணத்தின் இரண்டாம் நாளில் பெய்ஜிங்கில் உள்ள நன் ஜியா போ மசூதிக்கு வருகை தந்து அங்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்குபெற்றதாக வெளியாகி இருக்கிறது.

முன்னாள் மலேசிய பிரதமர் அப்துல்லா அஹமத் பாடவி 4 ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் உள்ள மசூதிக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோவே தவறாக பரப்பப்பட்டு வருகிறது. சீன நாட்டின் தற்போதைய பிரதமர் லீ கெகியாங் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் இஸ்லாம் மதத்தை சீனமயமாக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதன் விளைவாக நாடு முழுக்க இஸ்லாம் மதத்தினர் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இஸ்லாம் மட்டுமின்றி கிறிஸ்தவம், புத்த மதம் உள்ளிட்ட வெளிநாட்டு மதங்களை சீனமயமாக்கும் முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய பொழுது இஸ்லாம் மீதான சீன அரசின் நடவடிக்கையால் இவ்வாறு நடந்து உள்ளதாக சில மத அடிப்படைவாதிகள் தவறான பதிவுகளை பதிவிட்டனர். அதன் தொடர்ச்சியாக, சீன நாட்டின் பிரதமர் மசூதிக்கு வந்து நாட்டு மக்களை பாதுகாக்கும்படி தொழுகை செய்ததாக தவறான வீடியோவை இந்திய அளவில் பரப்பி உள்ளனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…