YouTurn

சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்ததா ?

சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நேரிட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக அளவில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகையில், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவியது. இதற்கிடையில், கேரளாவைச்...

பரவிய செய்தி

சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது . அதை அனுமதிக்கலாமா வேண்டாமா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நேரிட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக அளவில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகையில், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவியது. இதற்கிடையில், கேரளாவைச் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.



இந்நிலையில், சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை சுமந்து வந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தினத்தந்தி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சென்னை துறைமுகத்தின் பொறுப்பு கழக உயர்மட்டக்குழு அதிகாரிகள் கூட்டத்தில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் வந்த கப்பலை அனுமதிக்கலாமா அல்லது திருப்பி அனுப்பி வைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருதாகவும் கூறப்பட்டு வந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நேரத்தில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் சென்னைக்கு வந்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியோடு, எதிர்ப்புகளையும் பெற்றது.



இது குறித்து மருத்துவர் ராமதாஸ் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவ கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும் " எனக் கூறியிருந்தார்.

செய்திகளின் விளைவால், சீன மருத்துவ கழிவு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளதாக வெளியாகும் தகவலை சென்னை துறைமுகம் மறுத்து விளக்கம் அளித்து உள்ளது.

சென்னை துறைமுக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் எந்த கப்பலும் சென்னை துறைமுகத்திற்கு வரவில்லை. சென்னை துறைமுகத்திற்கு வரும் அனைத்து சரக்கு கப்பலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் சோதனைக்கு பிறகே சரக்குகளை விடுவிக்க சுங்க அதிகாரிகள் அனுமதிக்கச் செய்கின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகளும் சென்னை துறைமுகத்தை ஆய்வு செய்த போது, அந்த செய்தி தவறானது என கண்டறியப்பட்டது " எனக் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, கேரளாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர் குறித்து செய்தியால் சென்னை துறைமுகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும், சென்னை துறைமுக பகுதியில் உள்ள மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கூடுதல் சிகிச்சைக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கிறது.



சென்னை துறைமுகத்திற்கு மருத்துவ கழிவுகளுடன் வந்துள்ள சீனக் கப்பல் என மீம்ஸ் மற்றும் சில இணையதளங்களில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கப்பலின் புகைப்படம் India Trade ways இணையதளத்தில் 2017-ல் வெளியாகிய புகைப்படமாகும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…