YouTurn

சீன பட்டாசுகளை கண்டறிய Bar code பயன்படுமா ?

சீன பட்டாசுகளை கண்டறிய Bar code பயன்படுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் முதன்மையாக இருப்பது சிவகாசி நகரம் என அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் பட்டாசு விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் சீன பட்டாசுகள் நுழைகின்றன என்பது தகவல். சீன பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது என எதிர்ப்புகள் இருந்தாலும் சந்தையில் யாரும் அறியாத நேரத்தில்...

பரவிய செய்தி

தீபாவளிக்கு விற்பனையாகும் பட்டாசுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா அல்லது சீனாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை சோதித்து வாங்குகள். வாங்கும் பட்டாசுகளில் இருக்கும் Bar code-ல் முதல் மூன்று எண்கள் 690-695 என இருந்தால் அவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை, 890 என ஆரம்பித்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என அர்த்தம். அதிகம் பகிருங்கள்....

விரிவான விளக்கம்

 இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் முதன்மையாக இருப்பது சிவகாசி நகரம் என அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் பட்டாசு விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் சீன பட்டாசுகள் நுழைகின்றன என்பது தகவல். சீன பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது என எதிர்ப்புகள் இருந்தாலும் சந்தையில் யாரும் அறியாத நேரத்தில் விற்பனைக்கு வருகிறது.



சீன பட்டாசுகள் மொழியில், வடிவில் மாறுபடும் என நினைத்தால் மொழி, படம் என உள்ளூர் தயாரிப்பு போன்றே வடிவமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆகையால், bar code-ஐ வைத்து சீன தயாரிப்புகளை கண்டறியலாம் என செய்திகள் வருவதை பார்த்து இருப்போம்.



சீன பட்டாசு ஏன் வேண்டாம் ?

சீன பட்டாசுகளில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கெமிக்கல்களான குளோரேட் , சிவப்பு லெட், காப்பர் ஆக்சைட் மற்றும் லித்தியம் உள்ளன. இவை அதிக அளவு சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Bar code : 

ஒரு நாட்டில் தயாரிக்கும் பொருளின் உறையிலோ, பெட்டியிலோ Universal Product Code Label இடம்பெறும். UPC Bar Code-ன் முதல் 3 இலக்க குறியீடை வைத்து அது தயாரிக்கப்பட்ட நாட்டை கண்டறிய முடியாது. பொருளை தயாரிக்கும் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அதையே குறிக்கும். சில நாடுகள் அந்த முறையை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



690-699 இடைப்பட்ட குறியீடுகள் கொண்டவை  சீனாவைக் குறிக்கிறது என்பது உண்மை. ஆனால், இது பயன்படுமா என்றால் இல்லை என்று கூறலாம். பட்டாசு போன்ற பொருட்களை சீனாவில் தயாரிக்கும் நிறுவனம் சீனாவை சேர்ந்த நிறுவனமாக இருக்கும் என்று அவசியமில்லை. பிற நாடுகளை சேர்ந்த நிறுவனம் சீனாவில் பட்டாசுகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்தால் அதன் bar code 690 என இருக்காமல்  அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அந்த bar code இடம்பெறும்.

சீனாவை மையமாக கொண்ட  ஒரு நிறுவனம் தயாரித்த பட்டாசு இந்திய சந்தையில் விற்பனையாகும் போது இங்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் bar code ஆன இந்தியாவின் bar code இடம்பெறவும் வாய்ப்புள்ளது. இதை அதிகம் கவனத்தில் கொள்தல் அவசியம்.



Made in China “ அல்லது " Made in India “ என்பதன் மூலமும் பட்டாசுகள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியலாம். இருப்பினும், சீனாவில் இருந்து வரும் பட்டாசுகளில் “ Made in china “ என்பது இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆம், அது உண்மையே.!! சீனாவில் தயாரிக்கும் பொருட்களில் “ People’s Republic of china “ அல்லது PRC என அச்சிடப்பட்டு இருக்கும்.

சீன நிறுவனங்களின் பட்டாசுகளை படங்கள், மொழி, மற்றும் People’s Republic of India(PRC) என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். சீன பட்டாசுகளை தவிர்த்து இங்கு வாழ்நாள் முழுவதும் வெடி மருந்தில் வாழ்க்கையை கடக்கும் சொந்த தேச மக்களின் உழைப்பில் உருவாகும் பட்டாசுகளை வாங்கி தீபாவளியை மகிழ்வாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றியும் கொண்டாடுங்கள்.

சுருக்கமாக

690-699 இடைப்பட்ட குறியீடுகள் கொண்டவை  சீனாவைக் குறிக்கிறது . எனினும், சீன பட்டாசுகளை கண்டறிய உதவும் எனக் கூறும் 3 இலக்க bar code பொருட்கள் தயாரிக்கப்பட்ட இடத்தை கண்டறிய முடியாது.   பிற நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் சீனாவில் பொருட்களை தயாரிக்கும் போது அந்த நாட்டின் குறியீடுகளே இருக்கும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.