YouTurn

சென்னை தலித் மேயர் பிரியா ராஜன் எனப் பரவும் தவறானப் புகைப்படம் !

சென்னை தலித் மேயர் பிரியா ராஜன் எனப் பரவும் தவறானப் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இவங்க தான் சென்னையோட தலித் மேயர் ஆர்.பிரியா.



Facebook link 

விரிவான விளக்கம்

சென்னை மாநகராட்சியின் இளம் மேயராக 28 வயதான திருமதி பிரியா பொறுப்பேற்றார். இந்நிலையில், சென்னையின் தலித் மேயர் பிரியா ராஜன் என கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட தம்பதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண், சென்னை மேயர் பிரியா ராஜனை போல் இல்லை. இருவரும் வெவ்வேறு நபர் எனத் தெளிவாய் தெரிகிறது.

வைரல் செய்யப்படும் புகைப்படம் எடுக்கப்பட்ட சந்தோஷ்பிரேம் வின்ஃப்ரெட் எனும் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், " எனது குடும்ப உறுப்பினர் பிரியா ராஜன் சென்னை மேயராகி இருக்கிறார். அவரின் குடும்ப உறுப்பினரான முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் எனது மாமா " என மார்ச் 5-ம் தேதி பிரியா ராஜன் பதவியேற்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.



Facebook link 

நியூஸ் 18 தமிழ் சேனலுக்கு பிரியா ராஜன் அளித்த பேட்டியின் போது, " எங்கள் மாமா திரு.செங்கை சிவம் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதேபோல், என் அப்பா பகுதித் துணை செயலாளராக இருக்கிறார் " எனத் தெரிவித்து இருக்கிறார்.



பிரியா ராஜனின் தந்தை திமுக மூத்த நிர்வாகியாக திருவிக நகர் பகுதியில் இருந்து வருகிறார். முன்னாள் திமுக எம்எல்ஏ செங்கை சிவம் இவரது உறவினர். இப்படி அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். அவரது வேட்புமனுவில் இந்து ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.



முடிவு : 

நம் தேடலில், சென்னையின் தலித் மேயர் பிரியா ராஜன் எனப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது சென்னையின் மேயர் பிரியா ராஜன் அல்ல என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க