YouTurn

இந்த எண்களுக்கு அழைத்தால் பலசரக்குப் பொருட்கள் கிடைக்காது| தவறான தகவலை பகிர வேண்டாம்.

இந்த எண்களுக்கு அழைத்தால் பலசரக்குப் பொருட்கள் கிடைக்காது| தவறான தகவலை பகிர வேண்டாம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவிட்-19 நோய்த்தொற்றால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான பலசரக்குப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளதாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு செல்போன் எண்களை கொண்ட மேற்காணும் தகவல் சமூக வலைதளங்களில்...

பரவிய செய்தி

செல்போன் மூலமாக ஆர்டர் செய்யப்படும் பலசரக்குப் பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கோவிட்-19 நோய்த்தொற்றால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான பலசரக்குப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளதாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு செல்போன் எண்களை கொண்ட மேற்காணும் தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், ஃபார்வர்டு தகவலில் கூறியது போன்ற சேவை வழங்கப்படவில்லை என Greater chennai corporation முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சியின் சேவை மற்றும் உதவி எண்களே. இருப்பினும், ஃபார்வர்டு தகவலில் கூறுவது போன்று பலசரக்குகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையை நாங்கள் செய்யவில்லை எனப் பதிவிட்டு உள்ளனர்.



Facebook link | archive link 

சென்னை பகுதிகளுக்கு மாநகராட்சி வழங்கி இருக்கும் சேவை எண்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் மற்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…