YouTurn

மது ஆலைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் செல்கிறதா ?

மது ஆலைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் செல்கிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை மாநகரத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு மட்டுமின்றி தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கிடைக்கும் தண்ணீரை மக்களுக்கு அளித்து வருகின்றனர். தண்ணீர் பஞ்சம் நிலவுகிற நேரத்தில் செங்கல்பட்டு ஏரியில் இருந்து தண்ணீரை...

பரவிய செய்தி

செயற்கை தண்ணீர் பஞ்சம் ! சென்னையில் தண்ணீர் பஞ்சமாம் அப்படி என்றால் செங்கல்பட்டு ஏரியில் இருந்து பெரிய டேங்குகளில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு எங்கே கொண்டு செல்கிறார்கள் ? வேறு எங்கும் இல்லை. மதுபான தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. தண்ணீர் பஞ்ச காலத்தில் மதுபான ஆலைகளுக்கு தண்ணீர்!

விரிவான விளக்கம்

சென்னை மாநகரத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு மட்டுமின்றி தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கிடைக்கும் தண்ணீரை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சம் நிலவுகிற நேரத்தில் செங்கல்பட்டு ஏரியில் இருந்து தண்ணீரை ரயில் டேங்குகள் மூலம் மதுபான ஆலைகளுக்கு எடுத்துச் செல்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயில்வே மூலம் மதுபான ஆலைகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறதா என ஆராய்ந்து பார்த்தோம்.



நியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் 2019 ஜூன் 10-ம் தேதி வெளியான செய்தியில், " செங்கல்பட்டு பகுதியில் இருந்து போர்வேல் மூலம் எடுக்கப்பட்ட 4.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 20 பிளாஸ்டிக் டேங்குகளில் ரயில்கள் மூலம் பேசின்பிரிட்ஜ் மற்றும் சென்னை சென்ட்ரல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன " என கூறப்பட்டுள்ளது.

பேசின்பிரிட்ஜ் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ரயில்களின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதற்காக தினந்தோறும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதேபோன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 65,000 பயணிகள் வந்து செல்வதால், அங்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில், " தென்னக ரயில்வேக்கான தண்ணீர் தேவைக்கு செங்கல்பட்டு ஏரியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட டேங்குகள் நிறைந்த ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளதாக ரயில்வே அதிகாரி கூறியதாக வெளியாகி உள்ளது ".



2018-ல் http://indiarailinfo.net என்ற அதிகாரப்பூர்வ தளத்தில், ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் மையமான பேசின்பிரிட்ஜ்-க்கு செங்கல்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்வதாக பதிவிட்டு உள்ளனர்.

இதற்கு முன்பாக 2018-ல் கேரளாவில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செங்கல்பட்டு பகுதியில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில் டேங்குகள் தயாராக இருப்பதாக விகடனில் வீடியோ வெளியாகி இருந்தது. தண்ணீர் தேவைக்கு செங்கல்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது வழக்கமாக உள்ளது.



முடிவு :

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பொழுது பேசின்பிரிட்ஜ் மற்றும் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு செங்கல்பட்டு பகுதியில் இருந்து தண்ணீரை ரயில்களில் டேங்குகள் மூலம் எடுத்துச் செல்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஆனால், செங்கல்பட்டு ஏரியில் இருந்து மது ஆலைக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதாக தவறான செய்தியை பகிர்ந்து உள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்களின் படி பரவிய செய்தி வதந்தி என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

சுருக்கமாக

செங்கல்பட்டு பகுதியில் இருந்து ரயில்களில் டேங்குகள் மூலம் எடுத்து செல்லும் தண்ணீர் பேசின்பிரிட்ஜ் மற்றும் சென்னை சென்ட்ரல் பகுதிகளுக்கு ரயில்வே பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…