YouTurn

அன்று மாட்டுவண்டியில் செயற்கைக்கோள்.. இன்று சந்தியராயன்-2 விண்ணில் பாய்ந்தது !

அன்று மாட்டுவண்டியில் செயற்கைக்கோள்.. இன்று சந்தியராயன்-2 விண்ணில் பாய்ந்தது !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் ஜூலை 22-ம் தேதி சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிகழ்வை நாடே அதனைக் கொண்டாடி மகிழ்கிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான " ஆப்பிள் " மாட்டுவண்டியில்...

பரவிய செய்தி

1981-ம் ஆண்டில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான " ஆப்பிள் " -ஐ மாட்டுவண்டியில் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், இன்று இஸ்ரோவின் மூலம் சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இன்று உலகமே நம்மை வியந்து பார்க்கிறது.

விரிவான விளக்கம்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் ஜூலை 22-ம் தேதி சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிகழ்வை நாடே அதனைக் கொண்டாடி மகிழ்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான " ஆப்பிள் " மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லும் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும், செயற்கைக்கோளை மாட்டுவண்டியில் எடுத்துச் செல்ல இருந்த காரணத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மாட்டுவண்டியில் செயற்கைக்கோள் :

இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ” ஆப்பிள் ” 1981 ஆகஸ்ட் 13-ம் தேதி இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் இந்தியாவிற்கு அர்பணிக்கப்பட்டது. ஆப்பிள் செயற்கைக்கோளின் சோதனையின் போது அதனை மாட்டு வண்டியில் வைத்து இருக்கும் புகைப்படம் இஸ்ரோ இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.



அன்றைய காலத்தில், மின்காந்த குறிக்கீடு பிரதிபலிப்பு குறித்த முழுமையான புரிதல் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இயந்திரங்களை விஞ்ஞானிகள் பயன்படுத்த விரும்பாத காரணத்தினால் மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கூறியதாக மூத்த அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாகலா பிபிசியில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க : சைக்கிளில் ராக்கெட், மாட்டு வண்டியில் செயற்கைக்கோள் ஏன் ?| இந்திரா காந்தி நிதி வழங்கவில்லையா ?

இதனை வைத்து பல வதந்திகள் பரவி இருந்தன என்பதை முன்பே கட்டுரையின் வாயிலாக வெளியிட்டு இருந்தோம். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறதா என்பதை சந்திராயன்-2 உடைய வெற்றியே தீர்மானிக்கும்.

மேலும் படிக்க : சேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் !

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ தொடங்கிய சந்திராயன்-2 விண்கலம் பல தடைகளுக்கு பிறகு விண்ணில் பாய்ந்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…