YouTurn

நாடகக் காதல் குறித்து பெண் காவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஜாதியவாதிகள் பரப்பும் பொய் செய்தி!

நாடகக் காதல் குறித்து பெண் காவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஜாதியவாதிகள் பரப்பும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பெண் காவலர் ஒருவர் இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய வீடியோவை தவறான கண்ணோட்டத்தில் ஜாதியவாதிகள் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

நாடக காதல் செய்ய நாய் மாதிரி வருவானுக என் சகோதரிகளே உசார்.

X link

விரிவான விளக்கம்

தலித் ஆண்கள் மாற்று ஜாதி பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதை ஆதிக்க ஜாதியினர் நாடகக்காதல் எனப் பிரச்சாரம் செய்வதுண்டு. 


அந்த வகையில் காதல் என்ற பெயரில் உங்களிடம் வரும் ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்ற அறிவுரையைப் பெண் காவலர் ஒருவர் வழங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ஜாதிவெறி கொண்டவர்களால் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவில் ஒரு இடத்தில் மேடைக்குப் பின்னால் உள்ள பேனரில் ’விவேகானந்தா’ என்றும் ‘Women’s day celebration’ என்றும் இருப்பதைக் காணமுடிகிறது. 

இதனைக் கொண்டு தேடியதில், வீடியோவில் பேசக்கூடிய பெண் காவலரின் பெயர் மேகலா என்பதும் அவர் 2020ஆம் ஆண்டு பென்னாகரம் பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக (DSP) இருந்தபோது பேசிய வீடியோதான் இது என்பதை அறியமுடிந்தது. 


இந்த வீடியோ திருச்செங்கோடு, இளையம்பாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் 2020ஆம் ஆண்டு நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் எடுக்கப்பட்டது. இதன் முழு வீடியோ அக்கல்லூரியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் உள்ளது.

அதில், சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இணையக் குற்றங்கள், Morphing, காவலன் SOS செயலி போன்றவை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், ”எந்த ஆண்களையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். நல்லவர்களாக இருந்தால் தப்பு கிடையாது. நான் சொல்வது Blindly” என்றும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது, சில ஆண்கள் உங்களை ஏமாற்றக் கூடும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை ஜாதிய வன்மம் கொண்டவர்கள் தவறான கண்ணோட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

முடிவு:

பெண் காவலர் ஒருவர் இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய வீடியோவை, காதலால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர் எனப் பேசியதாகத் தவறான தகவல் ஜாதியவாதிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 




பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க