யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
" லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் " என்ற வாசகத்தை இளைஞர்கள், மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.தேவசகாயம் தேர்தலின் போது நேர்மையான வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் எனப் பேசக் கூடியவர். " தேர்தலில் ஓட்டிற்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் நேர்மையானவர்களுக்கு...
பரவிய செய்தி
வேட்பாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை வாங்கிக் கொள்ளுங்கள். அது அத்தனையும் அரசாங்கத்தை ஏமாற்றி அவர்கள் திருடி ஊழல் செய்த உங்கள் பணம் தான், மக்கள் பணம் தான். ஆனால், உங்கள் ஓட்டை நல்லவருக்கு போடுங்கள்.. சத்தியமே செய்திருந்தாலும் ஊழல் கட்சிகளுக்கு போடாதீர்கள். தெய்வம் நல்லதுதான் செய்யும். தண்டனை தாராது - திரு. சகாயம் IAS.

விரிவான விளக்கம்
" லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் " என்ற வாசகத்தை இளைஞர்கள், மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.தேவசகாயம் தேர்தலின் போது நேர்மையான வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் எனப் பேசக் கூடியவர்.
" தேர்தலில் ஓட்டிற்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் நேர்மையானவர்களுக்கு வாக்கு அளியுங்கள் " என திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியதாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக மக்கள் பாதை இயக்கத்தின் உமர் அவர்களிடம் Youturn தொடர்பு கொண்டு பேசிய போது, " திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுங்கள் என எங்கும் கூறவில்லை. அப்படி பரவும் செய்திகள் யாவும் வதந்திகள் " என கூறியுள்ளார்.
மேலும், இதனைப் பற்றி விளக்கம் அளிக்க மக்கள் பாதை தரப்பில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
தன் மேடை பேச்சுகளில், " கட்டாயம் ஓட்டு போட வேண்டும், பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும் " என வெளிப்படுத்தி வருபவர். 2016-ல் எத்திராஜ் காலேஜில் பேசிய திரு.சகாயம் ஐ.ஏ.எஸ், 2011 ஆம் ஆண்டில் மதுரை தேர்தல் சமயத்தில் நேர்மையான தேர்தல் பற்றியும், மாற்றம் கொண்டு வர இளைஞர்களை நாடியதாக கூறினார். அப்பொழுது நீங்கள் மட்டுமல்ல உங்கள் பெற்றோரிடமும் பணம் வாங்கி ஓட்டுப் போடக் கூடாது என சொல்லும்படி அறிவுறுத்தினார். அதன் விளைவு ஒரு விவசாயி தனக்கு கிடைத்த ரூ.500-ஐ அரசு நிர்வாகத்திடம் சேர்த்தாக பேசி இருப்பார் ".
தேர்தல் என்றும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றே திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் கூறி வருகிறார். ஒருபோதும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுங்கள் என கூறியதில்லை.

சுருக்கமாக
தேர்தலில் பணம் வாங்கிக் கொள்ளுமாறு திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியதாக எங்கும் இடம்பெறவில்லை. மாற்றாக, பணம் வாங்கி ஓட்டுப் போடாதீர்கள் என்றே கூறியுள்ளார்.