யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஒரு heavy meal சாப்பிட்டதற்கு பின்பு, கார்பனேற்றப்பட்ட தண்ணீர் / கூல்ட்ரிங்க்ஸ் குடித்தவர்களுக்கு டிஸ்ஸ்பெசியா (dyspepsia) அதாவது செரிமானக் கோளாறுகளும், மலச்சிக்கலும் குறைந்துள்ளதாக 2002-ல் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது. 
Instagram Link:

Instagram Link:
விரிவான விளக்கம்
கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் குறையும் என்று கூறி theathleticindian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோவில், "ஒரு Heavy meal சாப்பிட்டதற்கு பின்பு, உணவு செரிமானம் ஆவதற்காக கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பது நல்லதா? 2002 ல் 21 பேர் கொண்ட குழுவை இரண்டு குழுவாக பிரிந்து நடத்திய ஆய்வில், ஒரு குழுவிற்கு சாதாரண குழாய் தண்ணீரும் (Tap Water) , மற்றொரு குழுவிற்கு கார்பனேற்றப்பட்ட தண்ணீரும்(Carbonated Water) வழங்கினார்கள். கார்பனேற்றப்பட்ட தண்ணீர் அல்லது கூல்ட்ரிங்க்ஸ் குடித்தவர்களுக்கு டிஸ்ஸ்பெசியா (dyspepsia) அதாவது செரிமானக் கோளாறுகளும், மலச்சிக்கலும் குறைந்ததாக அதில் கூறப்பட்டிருக்கிறது.
இது digestion-ஐ அதிகரிக்க செய்தாலும், இதில் உள்ள sugar உடல் எடையை அதிகரிக்க செய்யும். அது மட்டுமில்லாமல் இரவு முழுவதும் உங்கள் பற்களில் இவை இருப்பதால், உங்கள் பற்களையும் கெட்டுப் போக வைக்கும். எனவே அளவாக குடிக்கிற வரை Cool drinks உங்கள் digestion-ஐ அதிகரிக்க செய்யும்." என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் தகவல் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி கடந்த 2022 செப்டம்பரில், "Functional டிஸ்ஸ்பெசியா மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு, கார்பனேற்றப்பட்ட தண்ணீரின் விளைவுகள் (Effects of carbonated water on functional dyspepsia and constipation)" என்ற தலைப்பில் ஒரு மருத்துவ ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

எனவே இந்த மருத்துவ ஆய்வுக் கட்டுரை குறித்தும், பரவி வரும் செய்திகளின் உண்மை தன்மையை அறியவும், யூடர்ன் தரப்பிலிருந்து பொதுநல மருத்துவரான பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். நமக்கு பதிலளித்து பேசிய அவர், இது 2002 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு. இது 21 பேரை மட்டுமே கொண்டு செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வு. எனவே இதை அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என விரிவுபடுத்தி கூற முடியாது. ஏனெனில் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரிகளின் அளவு மிகவும் குறைவு.
இதே போன்று இந்த ஆய்வுக் கட்டுரையில் கார்பனேற்றப்பட்ட தண்ணீர் குறித்து மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோக் (Coke), பெப்சி (Pepsi) அல்லது குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள் குறித்து இந்த ஆய்வில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பரவி வரும் வீடியோவில் Heavy Meals உண்ட பின்பு கார்பனேற்றப்பட்ட கூல்ட்ரிங்க்ஸ் குடித்தால், செரிமானக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் தொந்தரவுகள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறான செய்தியாகும்.
மேலும் இந்த ஆய்வு, CoGeDi International SpA என்ற ஒரு கார்பனேட்டட் தண்ணீர் நிறுவனத்தாலேயே நிதியுதவி வழக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆய்வு நிச்சயமாக 100 சதவீத நடுநிலைத்தன்மையுடன் உள்ளது என்று கூற முடியாது.

இந்த ஆய்வு functional dyspepsia நோய் பற்றியது. இங்கு அனைத்து dyspepsia நோய்களும், functional dyspepsia நோயாக மட்டும் இருப்பதில்லை. பெரும்பாலான dyspepsia நோய்கள், Organic dyspepsia வாகவே உள்ளன. இவை பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற காரணங்களாலேயே ஏற்படுகின்றன." என்று கூறினார்.
மேலும், மரபியல் துறை ஆராய்ச்சியாளரான முனைவர் தேவி அவர்களையும் யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், "Carbonated beverages and gastrointestinal system: Between myth and reality" என்று தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், கார்பனேற்றப்பட்ட பானத்தில் உள்ள பெரும்பாலான CO₂ உண்மையில் வயிற்றை அடைவதில்லை. கேன் அல்லது பாட்டிலைத் திறக்கும்போதே அவை வெளியேற்றப்பட்டு விடுகின்றன. சிறிய அளவே இரைப்பை குடல் அமைப்பின் மூலம் உறிஞ்சப்படுகிறது என்றும், ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கார்பனேற்றப்பட்ட தண்ணீர் மற்றும் பானங்கள் அருந்துவதால் பல் அரிப்புகள் ஏற்படுகின்றன. கார்பனேற்றப்படாத பானங்கள் கூட பல் அரிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் கார்பன் டை ஆக்சைடு தொடர்பான இரசாயன விளைவு, குடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அதிகரிப்பை தீர்மானிக்கும். எனவே இது செரிமான செயல்முறையை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம் 300 மில்லிக்கு மேல் கார்பனேற்றப்பட்ட திரவத்தை உட்கொண்டால் மட்டுமே இரைப்பைக் கோளாறு தொடர்பான அறிகுறிகள் தோன்றும் என்று இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே இது குறித்து தெளிவுப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் இந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. " என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்த ஆய்வில், கார்பனேற்றப்பட்ட தண்ணீர் அருந்துவதால் செரிமான கோளாறுகள் சரியாகும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், இது குறித்து மேலும் தெளிவுப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், கனமான உணவுகள் (heavy meal) சாப்பிட்ட பின்பு, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் தொந்தரவுகள் குறையும் என்று பரவி வரும் செய்திகள் தவறானவை.
கோக் (Coke), பெப்சி (Pepsi) அல்லது குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் குறித்து வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இது 21 பேரை மட்டுமே கொண்டு சோதனை செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வு. இது குறித்து மேலும் தெளிவுப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.