YouTurn

இஸ்லாமிய தாய், மகள் மீது காரை ஏற்றிய காவி?| உண்மை என்ன ?

இஸ்லாமிய தாய், மகள் மீது காரை ஏற்றிய காவி?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏப்ரல் 30-ம் தேதி Syed Baridh Raja எனும் முகநூல் பக்கத்தில், சாலையில் வந்த கார் ஓரமாக சென்ற இருவர் மீது மோதும் சிசிடிவி காட்சி ஆடியோ ஒன்றுடன் பதிவாகி இருக்கிறது. அதில், உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளின் மீது வேண்டுமென்றே காரைக் கொண்டு ஏற்றியதில் குழந்தை...

பரவிய செய்தி





உத்திரப்பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய தாய் தன் குழந்தைகளோடு ரோட்டின் ஓரமாக நடந்து போகிறார்.காவி நாய் ஒருவன் காரை எங்கே கொண்டு போய் இடித்து தள்ளியதில் குழந்தை உயிரிழந்தார். சங்கி நிற்காமல் எப்படி போகிறான். நாடு எங்கே போகிறது.






விரிவான விளக்கம்

ஏப்ரல் 30-ம் தேதி Syed Baridh Raja எனும் முகநூல் பக்கத்தில், சாலையில் வந்த கார் ஓரமாக சென்ற இருவர் மீது மோதும் சிசிடிவி காட்சி ஆடியோ ஒன்றுடன் பதிவாகி இருக்கிறது. அதில், உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளின் மீது வேண்டுமென்றே காரைக் கொண்டு ஏற்றியதில் குழந்தை உயிரிழந்ததாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலே குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வருகிறது.





உண்மை என்ன ?

இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமோபோஃபியா காரணமாக சாலையில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளை காவி அமைப்பினர் காரை ஏற்றியதில் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருமே இறந்ததாக இந்திய அளவில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தமிழில் குழந்தை மட்டுமே உயிரிழந்ததாக குறிப்பிட்டு உள்ளார்கள்.

Youtube link | archive link 

வீடியோ தொடர்பாக தேடிய பொழுது, ஏப்ரல் 26-ம் தேதி நியூஸ் 18 உத்தரகாண்ட் செய்தியின் யூடியூப் சேனலில் பால்லியா பகுதியில் சாலையில் நிகழ்ந்த கார் மோதலில் தாய் மற்றும் மகள் உயிரிழந்ததாக வைரலாகும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.



Twitter link | archive link 

ஏப்ரல் 26-ம் தேதி கன்வர்தீப் சிங் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ராஷ்ரா பகுதியில் நிகழ்ந்த விபத்தில் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்டதாகவும், உபி போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை டக் செய்து இருந்தார்.



Twitter link | archive link 

இந்த சம்பவம் தொடர்பாக பால்லியா போலீஸ் உடைய ட்விட்டர் பக்கத்தில் விபத்து தொடர்பான எஃப்.ஐ.ஆர் பக்கம் வெளியாகி உள்ளது. ராஷ்ரா பகுதியில் கார் மோதிச் சென்றதில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தாய் உஷா தேவி மற்றும் மகள் புஷ்பாஞ்சலி (12) ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்ற போது கார் விபத்து நிகழ்ந்து உள்ளது. எஃப்.ஐ.ஆர் பக்கத்தில் அவர்களின் பெயர்கள் உஷா தேவி மற்றும் புஷ்பாஞ்சலி என இடம்பெற்று இருப்பதை காணலாம்.

விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத நபரின் மீது ஐபிசி பிரிவு 304-ஏ மற்றும் 279 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, குற்றவாளியை தேடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் தளத்தில் கோரிக்கைகள் எழுகின்றன.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளை காரை ஏற்றிக் கொன்ற காவி என வைரலாகும் வீடியோவில் கூறப்படும் மதம் சார்ந்த கோணம் தவறானது. விபத்தில் இறந்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.போலீஸ் குற்றவாளியை தேடி வருவதாக அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…