YouTurn

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு | திருத்தப்பட்ட விலை தெரியுமா ?

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு | திருத்தப்பட்ட விலை தெரியுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இன்றளவிலும் கொடிய நோயாக பார்க்கப்படுபவைகளில் புற்றுநோயும் ஒன்றாகும். அந்நோயின் சிகிச்சைக்கு, மருந்துகளுக்கு ஏற்படும் செலவுகள் அதிகம் என்பதால் முறையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். புற்றுநோய்க்கான ஒரு கிமோதெரபி இன்ஜெக்சன் ரூ.22,000 வரை செல்கிறது. இதனால் சாமானிய மக்கள்...

பரவிய செய்தி

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு.

விரிவான விளக்கம்

இன்றளவிலும் கொடிய நோயாக பார்க்கப்படுபவைகளில் புற்றுநோயும் ஒன்றாகும். அந்நோயின் சிகிச்சைக்கு, மருந்துகளுக்கு ஏற்படும் செலவுகள் அதிகம் என்பதால் முறையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். புற்றுநோய்க்கான ஒரு கிமோதெரபி இன்ஜெக்சன் ரூ.22,000 வரை செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களால் கூட சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருக்கிறது.

மினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல் அன்ட் ஃபெர்டிலைசர்ஸ் கீழ் உள்ள National Pharmaceutical Pricing Authority ஆனது இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலைகளை பன்மடங்கு குறைத்து உள்ளது.



2019 மே 15-ம் தேதி National Pharmaceutical Pricing Authority வெளியிட்ட குறிப்பாணையில், " பிராண்ட்களின் அடிப்படையில் 9 புற்றுநோய் மருந்துகளின் விலையானது குறைக்கப்பட்டு மருந்துகளின் திருத்தப்பட்ட விற்பனை விலை வெளியிடப்பட்டது".



அதன்படி, pemxcel எனும் பிராண்ட் மூலம் நுரையீரல் புற்றுநோய்க்கு விற்பனை செய்யப்படும் இன்ஜெக்சன் pemetrexed(500mg) விலையானது 22,000-ல் இருந்து 2,880 ரூபாயாக விலை குறைக்கப்பட்டன. அதே பிராண்டின் pemetrexed(100mg) இன்ஜெக்சன் விலையானது 7,700-ல் இருந்து 800 ரூபாயாக விலை குறைக்கப்பட்டன. விலை குறைக்கப்பட்ட பிராண்டுகளின் மருந்துகளின் விலையை அட்டவணையில் காணலாம்.

இரண்டாம் முறையாக புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2019 மார்ச் 11-ம் தேதி அட்டவணைப்படுத்தப்படாத 463 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச விலையானது மாற்றியமைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட விலையானது வெளியிடப்பட்டது. விலை குறைக்கப்பட்ட 463 புற்றுநோய் மருந்துகளின் பட்டியலை NPPA வெளியிட்டு இருந்தது.



அரசின் எதிர்பார்ப்பின்படி, புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பால் இந்தியாவில் 22 லட்சம் புற்றுநோயாளிகள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு மருந்திற்கு உண்டாகும் செலவில் ரூ.800 கோடியை சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக குறிப்பிட்ட பிராண்டுகளின் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டதற்கு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மத்திய அரசின் அமைச்சகம் புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்தது பாராட்டப்பட வேண்டியது. உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் மக்களின் வசதிக்கே கிடைக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

சுருக்கமாக

மே 2019-ல் 9 புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்து National Pharmaceutical Pricing Authority குறிப்பாணையை வெளியிட்டது. இதற்கு முன்பாக மார்ச் மாதத்தில் அட்டவணைப்படுத்தப்படாத 463 புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்து இருந்தனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…