YouTurn

கேன்சர் செல், பூண்டை அருகே வைத்தால் பின்னோக்கி நகரும்: உண்மையா ?

கேன்சர் செல், பூண்டை அருகே வைத்தால் பின்னோக்கி நகரும்: உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இணையத்தில் மிகவும் வைரலான வீடியோக்களில் ஒன்று புற்றுநோய் செல்கள் மற்றும் பூண்டை வைத்து காண்பிக்கும் பரிசோதனை காட்சி. கருப்பு நிறத்தில் ஜெல்லி போன்று ஒன்றை தட்டில் கொட்டி அதனருகே பூண்டை கொண்டு செல்லும் பொழுது பின்னோக்கி நகர்கிறது. அதே தங்க மோதிரத்தை வைக்கும் பொழுது அதை நோக்கி நகர்கிறது...

பரவிய செய்தி

இணையத்தில் வைரலாகும் வீடியோ.. ஒருவரின் உடலில் இருந்து அகற்றப்பட்ட கேன்சர் செல்களுக்கு அருகே பூண்டை கொண்டு செல்லும் பொழுது பயந்து பின்னோக்கி நகர்கிறது. அதுவே, தங்கத்தை கொண்டு செல்லும் பொழுது தங்கத்தை நோக்கி முன்னேறுகிறது, தங்கத்தால் ஈர்க்கப்படுகிறது. கேன்சர் செல்களுக்கு பூண்டு ஒவ்வாது என்பதால் பூண்டை அதிகம் பயன்படுத்துங்கள். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கேன்சரை அதிகரிக்கும். இச்செய்தியை அதிகமாக பகிருங்கள்.

விரிவான விளக்கம்

இணையத்தில் மிகவும் வைரலான வீடியோக்களில் ஒன்று புற்றுநோய் செல்கள் மற்றும் பூண்டை வைத்து காண்பிக்கும் பரிசோதனை காட்சி. கருப்பு நிறத்தில் ஜெல்லி போன்று ஒன்றை தட்டில் கொட்டி அதனருகே பூண்டை கொண்டு செல்லும் பொழுது பின்னோக்கி நகர்கிறது. அதே தங்க மோதிரத்தை வைக்கும் பொழுது அதை நோக்கி நகர்கிறது.



புற்றுநோய் செல்கள் வைத்து நடத்தியதாக கூறும் வீடியோவில் இருப்பதை பார்க்கும் பொழுது சிறு வயதில் காந்த துகள்களை காகிதத்தில் வைத்து காந்தம் கொண்டு நகர்த்தி விளையாடுவது போன்று உள்ளது என்பது பலரின் கருத்து.

“ உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் பொழுது அவற்றிக்கு செல்லும் ஊட்டச்சத்து மற்றும் இரத்த வழங்கல் நின்று விடுவதால் அவை இறந்து விடுகிறது. ஒருவேளை புற்றுநோய் நோயாளி இறந்து விட்டால் புற்றுநோய் செல்களும் இறந்து விடும் “ என்பது மருத்துவரின் தகவல்.

புற்றுநோய் செல்கள் உடலில் இருந்து அகற்றப்பட்ட பிறகு Formalin Solution இல் வைக்கப்பட்டு நோயியல் சோதனை கூடத்திற்கு பரிசோதனை செய்ய அனுப்பப்படும். புற்றுநோய் செல்கள் மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவோ அல்லது நோயாளி, அவரது குடும்பத்திற்கு கொடுக்கவோ வாய்ப்பில்லை என்கிறார் மொஹ்த் ருஷ்தன்.

புற்றுநோய்க்கு பூண்டு எதிரானது , தங்கம், வெள்ளி போன்றவை ஆபத்தானவை என்றுக் கூறும் கருத்து தவறானவை. புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான cisplatin, carboplatin மற்றும் oxaliplatin உள்ளிட்ட மருந்துகள் பிளாட்டினம் சார்ந்தவை. தங்கத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துக்கான பண்புகள் இருப்பது தொடர்பான ஆய்வுகள் நடைபெறுகிறது.

புற்றுநோய் செல்கள் எனக் கூறி காண்பிக்கும் சோதனை வீடியோ மக்களை ஏமாற்றும் செயல் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

சுருக்கமாக

வைரலான வீடியோவில் இருப்பது புற்றுநோய் செல்களாக இருக்க வாய்ப்பில்லை, அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்களை அகற்றிய பிறகு அவை இறந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.