YouTurn

கால்வாய் பணிக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரமா ?

கால்வாய் பணிக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரதமர் மோடியின் ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இயந்திரம் ஒரு நாளைக்கு 3 முதல் 5 கி.மீ தொலைவிற்கு கால்வாய் பணியை முடிப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். மத்தியில் ஆளும் ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்காக உருவாக்கப்பட்ட...

பரவிய செய்தி

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நதிநீர் இணைப்பிக்காக உருவான இயந்திரம். நதிநீர் இணைப்பு கால்வாய்களை அமைப்பதற்காக முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை கால்வாய் பணியை முடிக்க முடியும்.

விரிவான விளக்கம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இயந்திரம் ஒரு நாளைக்கு 3 முதல் 5 கி.மீ தொலைவிற்கு கால்வாய் பணியை முடிப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.



மத்தியில் ஆளும் ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்காக உருவாக்கப்பட்ட இயந்திரம் என பகிரப்படுபவை இந்தியாவைச் சேர்ந்தவையே அல்ல. அந்த படத்தில் உள்ள இயந்திரத்தில் Gomaco என எழுதப்பட்டு உள்ளது.



1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட GOMACO என்ற நிறுவனம் கட்டுமானப் பணிகளுக்காக இயந்திரங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் முக்கியமாக தண்ணீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும்.



5 கி.மீ வரை கால்வாய் பாதையை உருவாக்கும் என கூறிய இந்த இயந்திரம் ஒரு " Full Canal Cross Section Finisher " . கால்வாயில் கான்கிரீட் கலவையை செலுத்தி முழுமையாக முடித்து வைக்கிறது.



Gomaco நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் பல நாடுகளில் கட்டுமானப் பணிகளுக்காக கட்டுமான நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கால்வாய் அமைக்கும் இயந்திரங்கள் கீழே.



அயல்நாட்டு நிறுவனம் தயாரித்த இயந்திரத்தை இந்தியாவில் மேக்இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் என தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

சுருக்கமாக

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் என கூறுபவை அமெரிக்கச் சேர்ந்த Gomaco நிறுவனத்திற்கு சொந்தமானவை. இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.