YouTurn

கனடா நாட்டின் தேசியக் கீதத்தை தமிழில் பாடியுள்ளார்களா ?

கனடா நாட்டின் தேசியக் கீதத்தை தமிழில் பாடியுள்ளார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

2017 ஆம் ஆண்டில் கனடாவின் 150வது சுதந்திர தினத்தை கொண்டாடிய டொராண்டோ சிம்பொனி இசைக்குழு அந்நாட்டின் தேசியக் கீதத்தை நாட்டில் பேசப்படும் 12 மொழிகளில் பதிவு செய்துள்ளது . கனேடிய தேசியக் கீதம் அரபு , அமெரிக்க சைன் மொழி , க்ரீ , ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , இத்தாலியன் , பஞ்சாபி , மாண்டரியன் ...

பரவிய செய்தி

கனடா நாட்டின் 150வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக அந்நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடியுள்ளனர் .

விரிவான விளக்கம்

 2017 ஆம் ஆண்டில் கனடாவின் 150வது சுதந்திர தினத்தை கொண்டாடிய டொராண்டோ சிம்பொனி இசைக்குழு அந்நாட்டின் தேசியக் கீதத்தை நாட்டில் பேசப்படும் 12 மொழிகளில் பதிவு செய்துள்ளது . கனேடிய தேசியக் கீதம்  அரபு , அமெரிக்க சைன் மொழி  , க்ரீ , ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , இத்தாலியன் , பஞ்சாபி , மாண்டரியன் , ஸ்பானிஷ் , தகலாக் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நிகழ்த்தப்பட்டன .



பல்வேறு பதிப்புகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன . இது அனைத்தையும் உள்ளாகியது மற்றும் படைப்பாற்றல் , பன்முகத்தன்மை பற்றியது என்று டி.எஸ்.ஓ பொது உறவுகளின் இயக்குனர் பிரான்சிஸ் லேபிள் கூறியுள்ளார் .




Video archived link  

கனடா நாட்டில் 150வது சுதந்திர தினத்திற்காக 12 மொழிகளில் பதிவு செய்யப்பட்ட பாடல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தின் கடற்க்கரையிலும் இசைக்குழுக்கள் உடன் இணைத்து நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் . 70 இசைக் கலைஞர்களை கொண்ட இசைக்குழு 12 பதிப்புகள் ஒவ்வொன்றிற்க்கும் இசையமைத்து , இசையுடன் நடித்தும் உள்ளனர் . இதில், தமிழ் பாடலை சுபா சங்கரன் என்பவர் பாடியுள்ளார்.




Tamil Video archived link 

இந்தியாவில் பேசப்படும் இரு மொழிகளில் கனடாவின் தேசியக் கீதம் பாடப்பட்டுள்ளது என்பது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை . கனடா நாட்டில் தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 4 லட்சம் அளவிற்கு குறைவாக இருந்தாலும் , தமிழ் மொழியை கௌரவித்துள்ளது .


அந்நாட்டின் அதிபர் தமிழர்களின் தைத் திருநாள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தது நாம் அனைவரும் அறிந்ததே . இவ்வாறு உலகின் பல இடங்களில் தமிழ் மொழிக்கான மரியாதை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது .

சுருக்கமாக

தமிழ் மட்டும் அல்லாமல் அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் தேசியக் கீதத்தைப் பாடியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க