YouTurn

எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என பரப்பப்படும் பழைய செய்தி

எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என பரப்பப்படும் பழைய செய்தி

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை...அப்பவே சந்தேகம் இருந்தது திராவிட நாடு திராவிட நாடுனு உருட்டுறாங்களேனு உண்மை இது தானா?



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் வெளியிட்டனர். அப்பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என பாலிமர் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதில், ‘திராவிட நாடு எனச் சொல்லிக்கொண்டு இருந்தார்களே அதன் உண்மை நிலை இதுதானா” என அதிமுகஆதரவாளர் இந்திராணி என்பவர் டிவீட் செய்துள்ளார். 



உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ் கார்ட் குறித்து பாலிமர் செய்தியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தேடினோம். 2020, செப்டம்பர் 5ம் தேதிஎளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு” என்ற தலைப்பில் அந்த நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டுள்ளது. 



எளிதில் தொழில் செய்ய உகந்த முதல் 10 மாநிலங்களின் பெயர்கள் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஒன்றிய அரசு வெளியிட்ட அப்பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்திலிருந்துள்ளது. 2020ல் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்தது அதிமுக. முதலமைச்சராகப் பதவி வகித்தது எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.



எளிதில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலினை 2022ம் ஜூன் மாதம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ஆந்திர பிரதேசம், குஜராத், தெலுங்கான, ஹரியானா, கர்நாடக, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து, இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்த கட்டத்தில் உள்ள மாநிலங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை எனப் பரப்பும் பாலிமர் செய்தியின் நியூஸ் கார்ட் கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதே போல் 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதல் 7 இடத்தில் இருப்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க