YouTurn

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட டாடா ஸ்டீல் & வோல்டாஸ் !

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட டாடா ஸ்டீல் & வோல்டாஸ் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

பரவிய செய்தி

உங்களுக்கு தெரியுமா ?டாடா ஸ்டீல் புர்ஜ் கலீஃபாவில் பயன்படுத்தப்பட்டது மற்றும் டாடா வோல்டாஸ் பூமியின் மிக உயரமான கட்டிடத்தில் ஏர் கண்டிஷனிங் சேவையை வழங்குகிறது.

burjkhalifa tata steel

விரிவான விளக்கம்

உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படும் 828 மீட்டர் உயரம் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் டாடா நிறுவனத்தின் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல், அந்த கட்டிடத்தில் குளிர்சாதன சேவையை டாடா வோல்டாஸ் வழங்கி இருக்கிறது என ரத்தன் டாடா புகைப்படத்துடன் கூடிய பதிவு வாசகர் ஒருவரால் பகிரப்பட்டு உண்மைத்தன்மை குறித்து கேட்கப்பட்டது.



2018-ல் டாடா நிறுவனத்தின் இணையதளத்தில் நியூஸ்ரூம் பிரிவில், " 1943-ல் ஹவுரா பாலம் முதல் 2010ல் புர்ஜ் கலீஃபா வரை டாடா ஸ்டீல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறந்த கட்டமைப்புகளை கட்டியெழுப்ப உதவியது " எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 2018-ம் ஆண்டு மே மாதம் டாடா குழுமத்தின் நிறுவன ட்விட்டர் பக்கத்தில், " உங்களுக்கு தெரியுமா துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா உலகின் மிக உயரமான கட்டிடம். ஆனால், எங்கள் நிறுவனங்களில் எது அதன் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்கு உதவியது என்பதை உங்களால் யூகிக்க முடியுமா ? " என ட்வீட் பதிவிட்டு இருந்தனர்.



Twitter link | Archive link 

அந்த ட்வீட் பதிவிற்கு கீழே, " ஆம், அது டாடா ஸ்டீல் மற்றும் வோல்டாஸ் ! இந்த தனித்துவமான கட்டிடமைப்பை உருவாக்க டாடா ஸ்டீல் யூரோப் 39,000 டன் ஸ்டீல் வழங்கியும்,13,000 டன் ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்துடன் குளிர்ச்சியாக இருக்க மைவோல்டாஸ் உதவுகிறது " என பதிலாக கூறப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க