யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இறுதியாக ஸ்ரீராமரின் முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டது. ஸ்ரீராம நவமி இரவு துபாய் புர்ஜ் கலிஃபா. ஜெய் ஸ்ரீ ராம்.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
இந்த ஆண்டு கடந்த மார்ச் 30ம் தேதி ராம நவமி கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் இக்கொண்டாட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையாகவும், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளங்களின் மீதான தாக்குதல்களாகவும் முடிந்தது.
இந்நிலையில், ராம நவமி அன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமரின் புகைப்படம் காட்டப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
https://twitter.com/jigarceo/status/1642534692619702272?s=46&t=kIszbQH_arRSG8kPbuGeZw
Archive link
அப்பதிவுகளில், ராமரின் முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டதினால் தான் இவ்வகையில் ஒளி விளக்குகளால் ராமருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் என்பது போல் வலதுசாரி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படத்தை கூகுல் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில் அது எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. அவ்வாறு ரிவர்ஸ் இமேஜ் செய்கையில் எடிட் செய்யப்படாத புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் புகைப்படம் பல வலைத் தளங்களில் உள்ளதைக் காண முடிந்தது.

‘புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் இரவுக் காட்சி’ என்ற தலைப்பில் ‘istock’ என்னும் இணையதளம் 2015ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28ம் தேதி எடிட் செய்யப்படாத புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, வைரல் செய்யப்படுவது போல உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் (828 மீ) ராமரின் படம் இல்லை.
அதே புகைப்படம் Dreamstime என்னும் இணையதளத்தில் மேற்கண்ட அதே தலைப்புடன் பதிவிடப் பட்டுள்ளது. அதிலும் ராமரின் படம் இல்லை. பரவக் கூடிய படம் குறித்து மேற்கொண்டு தேடியதில், புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ராமரின் படம் காட்சிப்படுத்தப்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இவற்றிலிருந்து 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து, ராமர் படம் இருப்பதைப் போலச் சித்தரித்துப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : “ராமர் பாலம்” கட்டப்பட்ட அதிசய மிதக்கும் கல் எனப் பரவும் செய்தியின் உண்மைத் தெரியுமா ?
முன்னதாக ராமர் பாலம் கட்டப் பயன்படுத்தப்பட்ட அதிசய மிதக்கும் கல் என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலின் உண்மைத் தன்மை குறித்து 'யூடர்ன்' செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க : அஜய் தேவ்கன் ராமர் கோவிலுக்கு 18 கோடி நன்கொடை அளித்தாரா ?
முடிவு :
நம் தேடலில், துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ராமர் படம் காட்சிப்படுத்தப்பட்டது என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. புகைப்பட விற்பனை தளங்களிலுள்ள அக்கட்டிடத்தின் படத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.