YouTurn

கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட 2 அனா நாணயமா ?

கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட 2 அனா நாணயமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

17ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பனி நாணயங்களை வெளியிட்டனர் . மசுலிபட்டினம் ,மெட்ராஸ் தெற்கு , சூரத் , கொல்கத்தா போன்ற பகுதிகளில் தனி தனியான ஜனாதிபதிகளையும் , பண அமைப்பையும் வைத்திருந்தார்கள் . இவை அனைத்தையும் 1835 இல் அவர்கள் முழுவதுமாக கலைத்தார்கள் . அதன் பின்னர் இந்தியா பிரிட்டிஷ்...

பரவிய செய்தி

கிழக்கிந்திய கம்பெனியால் 1818 ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டு அனா நாணயம் .

விரிவான விளக்கம்

17ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பனி நாணயங்களை வெளியிட்டனர் . மசுலிபட்டினம் ,மெட்ராஸ் தெற்கு , சூரத் , கொல்கத்தா போன்ற பகுதிகளில் தனி தனியான ஜனாதிபதிகளையும் , பண அமைப்பையும் வைத்திருந்தார்கள் .

இவை அனைத்தையும் 1835 இல் அவர்கள் முழுவதுமாக கலைத்தார்கள் . அதன் பின்னர் இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது .

1835 க்கு பிறகு புதிய நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் படி செய்தார்கள் . ஆனால் 1862 ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசர்களின் படங்களை நாணயங்களில் அச்சிட்டனர் .

1818 ஆண்டு வெளியிடப்பட்டதாக கூறப்படும் இந்த நாணயத்தில் பல தவறுகள் உள்ளன . 1800 களில் பெரும்பாலும் கால் மற்றும் அரை அனாக்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்தது .

மேலும் இந்த படத்தில் உள்ள நாணயத்தில் Aana என்ற ஆங்கில எழுத்தில் தவறு உள்ளது . பிரிட்டிஷ் நாணயங்களை பார்த்தால் அதில் 2 Aana என்று இல்லாமல் 2 Annas என்றே ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிற்கும் . இவ்வாறு பல உதாரணங்கள் இந்த நாணயத்தை பற்றி கூறலாம் .

சுருக்கமாக

பிரிட்டிஷ் அரசாங்கம் தாமரை பொறித்த இரண்டு அனா நாணயத்தை வெளியிடவில்லை .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.