யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"சீனாவின் வளர்ச்சியைப் பாருங்கள், சீனாவில் உள்ள பிரமாண்டமான பாலம் தான் இது" என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
சீனாவின் வளர்ச்சி. சீனா இப்படி வளர்ந்தற்க்கு காரணம் நாம்தான். அவர்களின் பொருட்களை நாம் வாங்காமலும், மற்ற நாடுகள் வாங்காமல் இருந்தாலே போதும்.
விரிவான விளக்கம்
சீனாவின் வளர்ச்சியைப் பாருங்கள், சீனாவில் உள்ள பிரமாண்டமான பாலம் தான் இது என்று கூறி 34 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், மிக நீளமாகவும் பிரமாண்டமாவும் உள்ள பாலம் ஒன்றில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்றுக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
சீனாவின் வளர்ச்சி.சீனா இப்படி வளர்ந்தற்க்கு காரணம் நாமதான். அவனுங்க பொருளை நாம வாங்காமலும் .மற்ற நாடுகள் வாங்காமல் இருந்தாலே போதும். pic.twitter.com/eaXi0t4tfY
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது சீனாவில் உள்ள பாலம் இல்லை என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் வீடியோவில், “paulolimads” என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அது குறித்த தேடலைத் தொடங்கினோம். கடந்த 2024 நவம்பர் 15 அன்று பரவி வரும் இதே வீடியோ “paulolimads” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
அதில், “இந்த விடுமுறை வார இறுதியில் ரியோ-நிடெரோய் பாலத்தை 1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! பலரும் இது ரியோ-நிடெரோய் பாலம் என்று நம்ப மாட்டார்கள். ஆனால் இது ரியோ-நிடெரோய் பாலம் தான் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் “jfxturistando” என்ற யூடியூப் பக்கத்திலும் பரவி வரும் இதே வீடியோ “ரியோ-நிடெரோய் பாலம்” என்று குறிப்பிட்டு கடந்த 2024 நவம்பர் 16 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், பிரேசில் நாட்டில் உள்ள “ரியோ-நிடெரோய் பாலம்” என்று குறிப்பிடப்பட்ட பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுடன், பரவி வரும் வீடியோவின் காட்சிகள் கச்சிதமாக பொருந்துவதைக் காண முடிகிறது.
எனவே பரவி வரும் வீடியோவில் இருப்பது சீனாவில் உள்ள பாலம் அல்ல. பிரேசில் நாட்டில் உள்ள “ரியோ–நிடெரோய் பாலம்” என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பலரும் பரவி வரும் வீடியோவை “சீனாவின் வளர்ச்சியைப் பாருங்கள், சீனாவில் உள்ள பிரமாண்டமான பாலம் இது” என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோவில் இருப்பது சீனாவின் உள்ள பிரமாண்டமான பாலம் அல்ல, பிரேசில் நாட்டில் உள்ள “ரியோ–நிடெரோய் பாலம்” என்பது தெளிவாகிறது.