YouTurn

பிரம்மபுத்திராவின் நீருக்கடியில் கட்டிய சுரங்கப்பாதை எனப் பரப்பப்படும் ஐரோப்பா, நார்வே திட்டத்தின் மாதிரி படங்கள் !

பிரம்மபுத்திராவின் நீருக்கடியில் கட்டிய சுரங்கப்பாதை எனப் பரப்பப்படும் ஐரோப்பா, நார்வே திட்டத்தின் மாதிரி படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மோடியால் முடிந்தால் அது புதிய இந்தியா எனப்படும். இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இது அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட சுமார் 14 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஆகும்.

விரிவான விளக்கம்

அசாம் மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சாலை மற்றும் ரயில் பாதையைக் கொண்ட சுமார் 14 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை கட்டப்பட்டு உள்ளதாக ஓர் தகவல் பாஜகவினரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



Archive link



இத்தகவல் உடன் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் வாகனங்கள், ரயில் செல்வது போன்ற படங்களும், பிரதமர் மோடி பாலத்தின் மீது இருக்கும் படங்களும் இணைக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

 உண்மை என்ன ? 



நீருக்கடியில் ரயில் பாதை மற்றும் சாலை இடம்பெற்ற முதல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஐரோப்பாவில் அமைக்கப்படும் ஃபெஹ்மர்ன் பெல்ட் சுரங்கப்பாதை திட்டத்தின் மாதிரிப் படம் என 2017-ல் worldhighways எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை ஜெர்மனியின் ஃபெஹ்மர்ன் தீவையும், டென்மார்க்கின் லோல்லேன்ட் தீவையும் இணைக்கும் திட்டத்தில் 18கி.மீ தொலைவிற்கு கடலுக்கு அடியில் அமைக்கப்படுகிறது.



அடுத்ததாக உள்ள சுரங்கப்பாதை படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016-ல் நார்வே அரசாங்கம் நீருக்கடியில் அமைக்க திட்டமிட்ட சுரங்கப்பாதை குறித்த செய்தியில் இந்த மாதிரி படம் இடம்பெற்று இருக்கிறது.



பிரதமர் மோடி பாலத்தின் மீது இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2011-ல் கட்ட தொடங்கப்பட்டு 2017-ல் அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் நீளமான புபேன் ஹசரிகா பாலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.



2022 மே 18-ம் தேதி இணையதளத்தின் செய்தியில், இந்திய அரசு அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திராவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை கொண்ட சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. 9கி.மீ தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு தோராயமாக 7000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட சுமார் 14 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை என பரப்பப்படும் தகவல் மற்றும் புகைப்படங்கள் தவறானது. இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை கொண்ட சுரங்கப்பாதை திட்டத்தை அசாம் மாநிலத்தில் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டு மட்டுமே உள்ளது.

மேலும், தகவலுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் ஐரோப்பா மற்றும் நார்வே நாடுகளில் நீருக்கடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை தொடர்பாக வெளியான மாதிரி படங்கள். பிரதமர் மோடி பாலத்தின் மீது இருக்கும் புகைப்படம் 2017-ல் அசாம் மாநிலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பாலத்தை திறந்து வைக்கும் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க