YouTurn

அடி கொடுத்தவருக்கே இந்த நிலைமைனா.. வைரல் செய்யப்படும் படத்தின் உண்மை பின்னணி ?

அடி கொடுத்தவருக்கே இந்த நிலைமைனா.. வைரல் செய்யப்படும் படத்தின் உண்மை பின்னணி ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

அடி கொடுத்த நம்ம கைப்புள்ளைக்கே இந்த நிலைமைன்னா அப்ப அடி வாங்கினவன் உசுரோட இருப்பான்னா நினைக்கிற மொமன்ட்

விரிவான விளக்கம்

குத்துச்சண்டை வீரர் ஒருவர் பலத்த காயங்களுடன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வீரருக்கே இவ்வளவு காயம் எனில் தோல்வியடைந்த வீரரின் நிலைமையை நினைத்துப் பாருங்கள் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது. அப்படத்தில் குத்துச்சண்டை வீரர் ஒருவரின் கையை வேறொருவர் உயர்த்தி காட்டுகிறார். அதில், 'If this is the winner, Imagine the loser' என்றுள்ளது.



Archive link  

உண்மை என்ன ?

குத்துச் சண்டை வீரர் குறித்துப் பரப்பப்படும் படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அதில் இருப்பது ரஷ்ய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் டெனிஸ் லெபடேவ் (Denis Lebedev) என்பதை அறிய முடிந்தது. 



அப்படத்தினை புகைப்பட விற்பனை தளமான Getty Images-ல் பதிவிடப்பட்டுள்ளது. அது பற்றிய தகவலில், “2013ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி ரஷ்யாவின் மாஸ்கோவில் க்ரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த WBA க்ரூசர்வெயிட் டைட்டில் போட்டியில் பனாமாவைச் சேர்ந்த கில்லர்மோ ஜோன்ஸ் ஆல் தோற்கடிக்கப்பட்ட ரஷ்யாவின் டெனிஸ் லெபடேவின் கையை ப்ரமோட்டர் டான் கிங் உயர்த்தினார்” என்றுள்ளது. 

மேலும் அப்போட்டியில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களையும் Getty Images-ல் காண முடிந்தது. அப்பதிவுகளிலும் கில்லர்மோ ஜோன்ஸ் (Guillermo Jones) வெற்றி பெற்றதாகவே உள்ளது. 



கில்லர்மோ ஜோன்ஸ் கலந்து கொண்ட போட்டிகள், அதில் அவர் பெற்ற வெற்றி தோல்விகள் பற்றிய விவரம் ‘Box Rec’ என்னும் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் 2013, மே மாதம் நடைபெற்ற போட்டியில் கில்லர்மோ ஜோன்ஸ் (Guillermo Jones) வெற்றி பெற்றார் என்றே உள்ளது.



டெனிஸ் லெபடேவ் மற்றும் கில்லர்மோ ஜோன்ஸ் இடையே 2013ல் நடந்த போட்டி ‘TheALLBOXING’ என்னும் யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் கில்லர்மோ ஜோன்ஸ் தனது வெற்றியை கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது.  இது தொடர்பாக 'sky sports' தளத்தில் வெளியான செய்தியிலும் கில்லர்மோ ஜோன்ஸ் வெற்றி அடைந்தார் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. 



இவற்றிலிருந்து அந்த போட்டியில் வெற்றி பெற்றது கில்லர்மோ ஜோன்ஸ் என்பதை உறுதி செய்ய முடிகிறது. அதே நேரத்தில் தோல்வியடைந்த டெனிஸ் லெபடேவ் கையை ப்ரமோட்டர் டான் கிங் உயர்த்த காரணம் என்ன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. போட்டியின் தொடக்கத்திலேயே டெனிஸ் லெபடேவ் கண்ணில் காயம் ஏற்படுகிறது. அதே இடத்தில் மீண்டும் மீண்டும் அடிபட்டு வலது கண் வீங்கிவிட்டது. அந்த நிலையிலும் அவர் கடைசிவரை போட்டியிட்டதைக் கவுரவிக்கும் விதமாகவே டான் கிங் அவரது கையினை உயர்த்தியிருக்கக் கூடும். 

முடிவு : 

நம் தேடலில், வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரருக்கே இவ்வளவு அடி என்றால், தோற்ற வீரரின் நிலைமையை நினைத்துப் பாருங்கள் என சமூக வலைத்தளங்களில் பரவும் படத்தில் இருக்கும் டெனிஸ் லெபடேவ் என்பவர் அப்போட்டியில் வெற்றி பெறவில்லை. அப்போட்டியில் கில்லர்மோ ஜோன்ஸ் என்பவரே வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க