
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2008 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த “ ஜீவன் இரத்த வங்கி ” மற்றும் ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இரத்தம் கிடைப்பதற்காக ஓர் சேவையைத் தொடங்கினர். இச்சேவை இரத்த வங்கி மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் இரத்தம் இருப்பு பற்றிய தகவல்களைத் போன்களின் மூலம்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2008 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த “ ஜீவன் இரத்த வங்கி ” மற்றும் ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இரத்தம் கிடைப்பதற்காக ஓர் சேவையைத் தொடங்கினர். இச்சேவை இரத்த வங்கி மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் இரத்தம் இருப்பு பற்றிய தகவல்களைத் போன்களின் மூலம் தெரிந்துக் கொள்ள ஏதுவாக அமைந்தது.
அதற்கென பிரத்யேக எண்களை ஏர்டெல் நிறுவனம் வழங்கியது. இதற்கு “ ஏர்டெல் கேர் ஃபார் எவ்ரிவோன் ” என்ற எஸ்.எம்.எஸ் சேவையை அறிவித்தது. இதில், 96000 97000 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் தேவையான தகவல்களைப் பெறலாம்.

மேலும், 96000 97000 என்ற எண்ணிற்கு < BLOOD GROUP + or - > என்று டைப் செய்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் இரத்தம் பற்றிய தகவல்கள் உடனடியாக உங்களுக்கு கிடைக்கும். மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது டோல் ப்ரீ எண் என்றும் கூறியிருந்தனர். இதைத் தவிர, ஜீவன் இரத்த வங்கியை நேரடியாகத் தொடர்புக் கொள்ளவும் தொலைபேசி எங்களை வழங்கி இருந்தனர்.
இத்தகைய சேவையானது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், தற்போது இச்சேவை நடைமுறையில் இல்லை என்பதே உண்மை. ஆனால், இது தொடர்பான செய்திகள் குறுச்செய்தியின் மூலம் பரவி வருகின்றது.
எனினும், இது போன்று மக்களுக்கு உடனடியாக இரத்தம் கிடைப்பதற்கு பல அமைப்புகள் உதவி புரிந்து வருகின்றனர். அவர்களைத் தொடர்புக் கொண்டால் தேவையான இரத்தம் உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளன.