YouTurn

இரத்த சேவைக்கு " Blood on call 104 " திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதா ?

இரத்த சேவைக்கு " Blood on call 104 " திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் மகாராஷ்டிரா மாநில அரசு " ஜீவன் அம்ருதா சேவா " அல்லது " blood on call " எனும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இந்த திட்டத்தின் படி அவசர நிலையில் இரத்தம் தேவைப்படும் நபர்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்கள் இருக்கும் மாவட்ட இரத்த வங்கியில் இருந்து...

பரவிய செய்தி

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய திட்டம் Blood on call 104. இதில் 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் நீங்கள் கேட்கும் குருதி வகையில் இரத்தம் வரும். இதற்கு கட்டணமாக ரூ.450 வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. தயவு செய்து அதிகமாக பகிரவும்.


விரிவான விளக்கம்

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் மகாராஷ்டிரா மாநில அரசு " ஜீவன் அம்ருதா சேவா " அல்லது " blood on call " எனும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இந்த திட்டத்தின் படி அவசர நிலையில் இரத்தம் தேவைப்படும் நபர்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்கள் இருக்கும் மாவட்ட இரத்த வங்கியில் இருந்து தேவையான இரத்தம் அனுப்பி வைக்கப்படும் .


இதன் செயல்முறைக்கு புனேவில் உள்ள " அணுத் சிவில் ஹாஸ்பிடலில் " அழைப்புகளை பெறும் கால் சென்டர் அமைப்பு அமைக்கப்பட்டன. 104 எண்ணிற்கு வரும் அழைப்புகள் இந்த இடத்தில் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் மாவட்டத்தின் ரத்த வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரத்தமானது கொண்டு சேர்க்கப்படும்.


blood on call


இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பேசிய அம்மாநில முதல்வர் பிரித்வி சவான், " இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 40 கி.மீ சுற்றி உள்ள பகுதிகளுக்கு பிரத்யேகமாக குளிர் பெட்டிகள் கொண்ட மோட்டார் சைக்கிளில் இரத்தமானது கொண்டு சேர்க்கப்படும் " எனத் தெரிவித்து இருந்தார்.


இந்த திட்டத்தில், கொண்டு வரப்படும் இரத்த பாட்டில் ஒன்றுக்கு 450 ரூபாயும் உடன் சேர்க்க வேண்டிய இடம் 10 கி.மீ-க்குள் இருந்தால் போக்குவரத்து கட்டணம் 50 ரூபாயாகவும், 11-40 கி.மீ ஆக இருந்தால் போக்குவரத்து கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.


" ஜீவன் அம்ருதா சேவா " எனும் திட்டம் மகாராஷ்டிரா மாநில அரசால் 2014 ஜனவரியில் கொண்டு வரப்பட்ட திட்டம். மத்திய அரசின் புதிய திட்டம் அல்ல.


தமிழ்நாட்டில் 104 சேவை :




Youtube link | archived link 


2014-ல் இருந்து தமிழ்நாட்டில் 104 என்ற உதவி எண்ணை கொண்டு மருத்துவ சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் 104 மருத்துவ உதவி சேவையின் மூலம் உடல்நலம், மருத்துவம் தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு, மனநல ஆலோசனை பெறுவதற்கு, புகார் தெரிவிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Update (3, October 2024):

இந்த திட்டம் 2014ல் மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநில அரசால் தொடங்கக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 2022ல் நிறுத்தப்பட்டுவிட்டது. மகாராஷ்டிராவில் அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவிற்கான ரத்த வங்கியும் ரத்த சேமிப்பு வசதிகளும் இருப்பதால் இந்த திட்டத்தின் மூலம் ரத்தம் பெறுவோர் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

P

சுருக்கமாக

எது உண்மை : " blood on call " எனும் திட்டத்தில் 104 எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் கேட்கும் வகையில் இரத்தம் அனுப்பி வைப்பது 2014-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்பட்டது.


எது தவறு : மத்திய அரசு திட்டம் எனக் கூறுவது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.